விஜய் சேதுபதி பெயர் இனி ‘ யமலிங்கம்? ’

இயக்குனர் ஜனநாதனின் படங்கள் எப்பவுமே மனசுக்கு நெருக்கமானவை. அது சாமானியர்களுக்கான குரல் என்றாலும் தவறில்லை. அவர் தற்போது இயக்கி வரும் ‘புறம்போக்கு’ அப்படியொரு கதை அம்சம் கொண்ட படம்தானாம். பெரும் பொருட்செலவில் படத்தை தயாரித்து வருகிறது UTV.

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் , மற்றும் கார்த்திகா என நட்சத்திர குவியலாக திகழும் இந்த படம் துரித வேகத்தில் படமாக்கபட்டு வருகிறது. ‘புறம்போக்கு’ படத்தை பற்றி சில கருத்துகளை பகிர்ந்துக் கொள்கிறார் இயக்குனர் ஜனநாதன். ஜெயலலிதா ஜெயிலில் இருக்கும் இந்த நேரத்தில் இவர் சிறை பற்றி கூறியிருக்கும் விஷயங்கள் ஏதோ ஜனநாதனின் குரல் ஒரு டைப்பாக ஒலிக்கிறதே என்ற எண்ணத்தை உண்டாக்கினாலும் ஆச்சர்யமில்லை. ஆனால்…? அவர் சொல்லும் உதாரணங்கள் அந்த எண்ணத்தை ஒரேயடியாக நமக்குள் விதைத்துவிடாது என்ற நம்பிக்கையோடு அவரது எண்ணத்தை கேட்போமா?

‘சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறை சாலையில் தான் அரங்கேறி உள்ளது. மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்துதான் தங்களது வெற்றி சரித்தரத்தை துவங்கினர். சிறை சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரமாகவே இருந்திருக்கிறது. .என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்திரத்தில் இருந்து எடுக்க பட்டதுதான்.

சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூட்டப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுக படுத்தியவருமான மெக்கலே வின் பெயர் ஷ்யாமுக்கும், வைக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜனநாதன்.

அதற்கப்புறம் அவர் விஜய் சேதுபதிக்கு வைத்திருக்கும் பெயர்தான் அட… என்று ஒரு நிமிடம் திரும்ப வைக்கிறது அந்த பக்கம்.

விஜய் சேதுபதியின் கதா பாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்ட பட்டு உள்ளதாம். இந்த யமலிங்கம் எந்த சுதந்திரபோராட்ட வீரரின் பெயரோ? அல்லது கற்பனையோ? ஆனாலும் வித்தியாசமாக இருக்கிறதல்லவா?

இனிமேல் விஜய்சேதுபதியை அவரது ரசிகர்கள் மிஸ்டர் யமலிங்கம் என்றுதான் அழைப்பார்களோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Filmmakers Bala, Seeman & Mysskin launch ‘THE MUSIC SCHOOL’

Close