அழைப்பிதழோடு ஒரு கடிதம் அசர வைத்த விஜய்-அமலாபால்!

விஐபிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே மறுநாள் கிடக்கும் குப்பைகள் அத்தனையும் கசங்கிய மலர் கொத்துக்களாகவே இருக்கும். அன்பை தெரிவிக்க பூங்கொத்து அவசியம்தான். ஆனால் அது மலைபோல குவிக்கப்பட்டு ஒருவருக்கும் பிரயோஜனமில்லாமல் குப்பை லாரியில் போவதை நினைத்தால், மனசு ஐயோவாகிவிடும். அன்பளிப்பை தவிர்க்கவும், மாலைகளை தவிர்க்கவும், சால்வைகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக ஏதாவது புத்தகங்களை கொடுங்கள் என்று அட்வைஸ் செய்தாலும், இந்த குப்பைகளை சேர்க்கவே பிரியப்படுகிறார்கள் சக வி.ஐ.பிகள்.

எழுத்தாளர் அஜயன் பாலாவின் திருமண வரவேற்பில் வந்திருந்த அத்தனை பேருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவர் டைரக்டர் விஜய்யின் நெருங்கிய நண்பர். இது அஜயன் பாலாவால் நிகழ்ந்ததா, அல்லது தம்பதிகளின் விருப்பமா தெரியாது? இருந்தாலும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எதற்கு தெரியுமா?

விஜய் அமலாபால் தம்பதிகள் தங்கள் திருமண அழைப்பிதழோடு ஒரு கடிதத்தையும் இணைத்திருக்கிறார்கள். அதை படித்தால் புரியும் உங்களுக்கு.

எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ “எபிலிட்டி பவுன்டேஷன்” என்ற அமைப்புக்கு வழங்குங்கள். இந்த அமைப்பு 1995ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது.ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும். இதுதான் அந்த கடிதம்.

ஒரே நாளில் உச்சம் தொட்டுவிட்டீர்கள் தம்பதிகளே… வாழ்க!

Read previous post:
காசோலை ரிட்டர்ன்? வங்கி அதிகாரிகளை அலையவிட்ட ஸ்ருதி

எவ்வளவோ பணம் இருந்தாலும், கடன் வாங்கி கலர் படம் ஓட்டுவதுதான் பணக்காரர்கள் பலருக்கு வாடிக்கை. எல்லாம் ‘டாக்ஸ்’ தந்திரம். அப்படியொரு தந்திரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது நிஜமாகவே...

Close