மண்டபமே புக் பண்ணியாச்சு? மற்றதையும் சொல்றதுக்கு என்னவாம்?
மண்டபமே புக் பண்ணியாச்சு. இன்னும் என்ன தயக்கம்? இப்படியொரு கேள்வியை இயக்குனர் விஜய்யை பார்த்து கேட்க துடிக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். ஆனால் அவர் இங்கு இருந்தால்தானே? அவசரம் அவசரமாக வெளிநாட்டுக்கு கிளம்பியிருக்கிறார். அவர் வந்ததும் நான் எங்கள் எதிர்காலத்தை பற்றி உங்களிடம் தெளிவா சொல்றோம். அதுவரைக்கும் வெயிட் என்கிறார் இங்கிருக்கும் அமலாபால்.
எப்படியும் கல்யாணம்னுதான் செய்தி வரப்போகுது? சென்னையில இருக்கிற பெரிய மண்டபங்களையெல்லாம் சல்லடை போட்டால் விஷயம் தெரியப் போவுது? என்கிற கண்ணோட்டத்தோடு விசாரிக்க துவங்கிய பிரஸ்சுக்கு ஜெகஜோதியாக சிக்கியது நியூஸ். ஆமாம்… ராஜா அண்ணாமலை புரத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தைதான் விஜய்- அமலாபால் திருமண நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
தாலி கட்ற கடைசி நிமிஷம் வரைக்கும் கூட, ‘நாங்க நட்பாதான் பழகுறோம்’ என்றெல்லாம் பம்மாத்து காட்டாமல் படக்குன்னு விஷயத்தை சொல்லி, பக்குவமா இன்விடேஷன் கொடுக்கிற வேலைய பாருங்க லவ்வர்ஸ்…