விஜய்க்கு பாராட்டு விழா நடக்காது! முறுக்கிக் கொள்ளும் சங்கங்கள்!

IARA AWARDS என்ற விருது 2014 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் உள்ள ஒரு அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை ‘இன்டர்நேஷனல் பெஸ்ட் ஆக்டர்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் விஜய். ‘மெர்சல்’ படத்திற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் இந்த செய்தி இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இதை பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் இதற்கு விஜய் ஒப்புக்கொள்வாரா என்பது டவுட். இந்த நிலையில்தான் இதை நடிகர் சங்கம் ஏன் கொண்டாடக் கூடாது என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் இங்கே.

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாக மறுக்கிறார்கள் கோடம்பாக்க புள்ளிகள் சிலர். ஏன்? விஷால் நடிகர் சங்கத்தின் செயலாளர் பொறுப்பிற்கு வந்த நாளில் இருந்தே சங்கத்தின் உள் விவகாரங்களில் மட்டுமல்ல, வெளி விவகாரங்களிலும் அக்கறை செலுத்தவில்லை விஜய். பொதுக்குழு உள்ளிட்ட முக்கியமான கூட்டங்களுக்கு கூட வந்தவர் இல்லை.

இதற்கு முன் சரத்குமார், ராதாரவி இருவரும் பதவியில் இருந்தபோது விஜய்யின் சம்பளம், விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய நஷ்டம் போன்ற விஷயங்களில் அக்கறையோடு தலையிட்டு முடித்து வைத்தார்கள் அவர்கள். அதனால் விஜய்க்கும் சங்கத்தின் மீது ஒரு நம்பிக்கையும் அக்கறையும் இருந்தது. ஆனால் இப்போது பஞ்சாயத்துகள் எதிலும் சிக்குவதில்லை அவர். சிக்கினாலும் சொந்த செல்வாக்கில் அதை தீர்த்துக் கொள்கிற அளவுக்கு பலம் பொருந்தியவராக மாறியிருக்கிறார். அப்படியிருக்க அவர் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

இன்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் வலுவாக இருக்கிற விஷால், தன் தொழில் போட்டியாளராக விஜய்யை கருதி வருவதாலும்(?) இந்த விருது விழாவை நடத்த முன்வர மாட்டார்.

ஆனால் தமிழகத்தில் இயங்கி வரும் சில கல்வி நிறுவனங்களின் தந்தைகள் மட்டும் ‘விஜய் ஒரு வார்த்தை சொல்லட்டும். ஊரை கூட்டி மேளம் கொட்டிடுவோம்’ என்று ஆர்வமாகிறார்களாம். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யிடம் இது குறித்து பேசி வருகிறார்களாம். இவர்கள் தவிர முன்னணி சேனல் காரர்கள் சிலரும் இதை பெரிய விழாவாக எடுத்து கொண்டாடிவிட வேண்டும் என்று துடிக்கிறார்களாம். டி.ஆர்.பி, ரொக்கம் என்று மனசு அலைபாயும் அல்லவா?

சலசலப்புக்கு ஆசைப்பட்டு சந்தோஷத்தை இழப்பவரல்ல விஜய். அதனால் எல்லாரும் கொஞ்ச நேரம் சும்மாயிருங்கப்பா…!

2 Comments
 1. Kannan says

  Athuve oru dupakuru award. Neenga journalist thane? Jalra illaiye?
  Investigate panni parungo. Behindwood alavukuda pirapalam illa.
  Mersal producer kasu koduththu vangiya award. Chinna release promote panna.
  Tamil journalist inthalavu iq?

  இந்த விருது விழாவை நடத்த முன்வர மாட்டார்.
  O neengale mudivupannitteengala.
  Vishal movie release aakuthilla degrade start pannungo. Athu vera vettimaaran movieoda. Unga suresh kamatchi group vera: Vijay opposite news today
  Next week ajith vs vishal news, sk +++
  Share pannungo. Vaalga journalism.

 2. அகஸ்டின் says

  தமிழ் திரை உலகில் விஜயை போன்ற ஒரு சுயநலவியாதியை யாரும் பார்த்து இருக்க முடியாது. தனக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்க வேண்டும் என நினைப்பான். ஆனால், நடிகர் சங்கம் நடத்தும் எந்த விழாவினையும் புறக்கணிப்பான் அந்த துரோகி விஜய். இந்த தேவாங்கு மூஞ்சி பயலுக்கு பாராட்டு விழா ஒரு கேடா ??? பணத்தை கொடுத்து வாங்கியது இனி வெளிச்சத்துக்கு வரும்.
  உண்மையான தமிழர்கள், இனியாவது அவனது உண்மை முகம் அறிந்து அவனது படத்தை புறக்கணிக்க வேண்டும். தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எப்படி ஹீரோவானார் துருவ்? இதெல்லாம் ஒரு காரணமாம்!

Close