கருணாசை பார்க்க ஜெயிலுக்குப் போறேன்! விஷால் முடிவால் சலசலப்பு?
ஊரே சேர்ந்து உச்சந்தலையில் குட்டு வைக்கும் என்று எதிர்பார்த்தால், ‘என்னதான் இருந்தாலும் அவரு ஒரு சட்டமன்ற உறுப்பினர். இந்த கைது நியாயமில்ல’ என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் ஓ.பொ. (?) தலைவர்கள். “நீ ஒரு சட்டமன்ற உறுப்பினர்தானே, ஏன்யா சாதிக்காரர்களுக்குள் கொலை வெறிய தூண்டுற மாதிரி பேசினே?” என்று கேட்டிருந்தால்தானே சரி?
சரி. போகட்டும்… ஆலம்பழத்தை பூசணியாக்கிவிட்டார்கள். அதுதான் உண்மை. இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த சண்டக்கோழி 2 படத்தின் பிரஸ்மீட்டிலும் கருணாஸ் பேச்சு பற்றி கேள்வி எழுப்பினார்கள் நிருபர்கள். பதில் சொன்ன விஷால்தான் புத்திசாலி. வேலியும் உடையாமல், வேட்டியும் கிழியாமல் தாண்டி விட்டார்.
“அவர் லிமிட் தாண்டி பேசிட்டார். கருணாஸ் குற்றம் சொன்ன அந்த போலீஸ் அதிகாரியை பற்றி எனக்கு தெரியும். ரொம்ப நேர்மையானவர்தான். நான் போன்ல அவர்ட்ட பேசியிருக்கேன். ஆனால் கருணாசை நாளைக்கே போய் சிறையில் பார்ப்பேன். அதுவும் நடக்கும்” என்றார்.
நடிகர் சங்க செயலாளர். சக நடிகர் ஒருவர் ஜெயில்ல ஒதுங்கியதை ரசிக்கவாவது போகணுமே? விஷால் இப்படி சொன்ன மறு வினாடியிலிருந்தே ஒரு யோசனை சொல்லி வருகிறார்களாம் அவருக்கு. “என்.எஸ்.கே, சிவாஜி மாதிரியான நடிகர்களின் பிறந்த நாளுக்கு நடிகர் சங்கத்தில் இதற்காகவே வளர்க்கப்பட்டு வரும் உதயா, ரமணா மாதிரியான நட்புகளை அனுப்பி வைத்து சாங்கியத்தை முடித்துக் கொள்வதுண்டு. அதுபோல கருணாஸ் முகாமிட்டிருக்கும் சிறைக்கும் இவர்களை அனுப்பி சாங்கியத்தை முடிக்க வேண்டியதுதானே?”
கூழ் குடிச்ச மாதிரியும் ஆச்சு. குவளைய நக்குனா மாதிரியும் ஆச்சு!
சொன்னதைச் செய்த விஷால் … இருப்புத்திரை படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கினார்…
சண்டைக் கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவின்போது, தான் சொன்னபடி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி மூலம் தயாரித்த இருப்புத்திரை படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாயை நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்தார். 20 விவசாயிகள் மேடையேற்றப்பட்டுக் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை இயக்குநரும் விவசாயியுமான பாண்டிராஜ் வழங்கினார்.விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும்போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. விஷாலின் இந்த செயல் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படத் துறையினரும் விஷாலைப் பாராட்டி வருகின்றனர்.