சொந்தப்படம்? விஜய் அதிரடி முடிவு!

ஆண்டவனே கதி என்று சரண்டர் ஆன பின்பும், அதுக்கும் மேல என்ன இருக்கு என்று தேடுவதுதானே வாழ்க்கை? அப்படியொரு அதிரடி தேடலுக்கு தயாராகிவிட்டார் விஜய். நீட்டுன இடத்துல கையெழுத்து போட்டுவிட்டு, கேட்கிற கோடிகளை வாங்கிக் கொண்டிருந்த விஜய்க்கு தானே முதலாளி ஆக வேண்டும் என்கிற ஆசை வந்ததில் தப்பில்லை. வாழ்க்கையில் ஒரு சேஞ்ச் வேண்டுமல்லவா?

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி தயாரிக்கிற படங்களில் நடித்து வந்த விஜய், இப்போது அப்பா இல்லாமலே ட்ரை பண்ண தயாராகிவிட்டார். பஞ்ச பூதங்களையும் பர்சுக்குள் அடக்கி விடுகிற பம்மாத்து ஃபீல்டில், கற்றது எதுவரை என்பதை அந்தப்படத்தின் ரிலீசுக்குப் பின் அறிந்து கொள்வார். ஆனால் விஜய்யின் இந்த முடிவு கோடம்பாக்கத்தில் அரசல் புரசலாக கசிந்து ஆனந்த கண்ணீரை வழிந்தோட விட்டிருக்கிறது பலரை.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நமக்கும் ஒரு வாய்ப்பு வரணும் என்று காத்திருக்கிறார்கள் டெக்னீஷியன்கள். அநேகமாக இந்தப் படத்தை இயக்குவது மோகன் ராஜாவாக இருக்கலாம் என்கிறார்கள்.

செலவை அளவா பண்ணி, வரவை சுகமா கொடுக்குற வழிய பாருங்க வாத்யார்…!

Read previous post:
வீதிக்கொரு சாதி! தேதிக்கொரு சினிமா! மியாவ், கர்ஜனை ஆகுமா?

Close