ரஜினி காலில் விழுந்த எஸ்.ஏ.சி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு

வெயில் அடங்கினாலும், வேர்கூரு அடங்கவில்லை கதையாகிவிட்டது ரஜினியின் முதல் அரசியல் பேச்சு. இங்கிலீஷ் பேசுங்க, அப்பதான் தமிழ் வாழும்… மாணவர்கள் அரசியலுக்கு வராதீங்க… எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என்றெல்லாம் அவர் பேசிய பேச்சுக்கு எக்கச்சக்க ரீயாக்ஷன்கள் நாட்டில். ஆளாளுக்கு கருத்துக்களை சொல்லி கசையடி கொடுத்துக் கொண்டிருக்க… ‘ஏளனம் பண்ணாதீங்க’ என்ற ரஜினியின் பேச்சு, காற்றோடு போச்சு.

இந்த கொடுமை போதென்று இப்போது ஒரு புதுக் கொடுமை. சுமார் ஒரு டஜன் சினிமாக்காரர்களை அதே மேடையில் ஏற்றியிருந்தார்கள். ரஜினியின் பிறந்த நாளன்று அவரைப்பற்றி நாலு வார்த்தை நல்ல விதமாக சொல்லுங்க என்று அணுகிய சேனலிடம், ‘பணம் தர்றீங்களா பேசுறேன். இல்லேன்னா நான் எதுக்கு ரஜினி பற்றி பேசணும்?’ என்று ஒருமுறை கேள்வி கேட்ட நடிகர் விஜயகுமார் மேடையே கிடுகிடுக்கிற அளவுக்கு ரஜினியை பாராட்டியதையெல்லாம் எந்த குளத்தில் எழுதி, எந்த சமுத்திரத்தில் கரைக்க?

அந்த நிகழ்ச்சியில்தான் மைக்கை பிடிக்க வந்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. ஒருபுறம் நாற்காலி கனவோடு நகர்ந்து கொண்டிருக்கிறார் விஜய். இவரோ பொத்தென்று ரஜினி காலில் விழ முற்பட்டார். அதுவே அங்கிருந்த இளைஞர்களுக்கு ஷாக். எல்லாரும் சேர்ந்து ரஜினியை முதல்வராக்குங்க என்கிற தொணியில் பேசிவிட்டு அமர்ந்தார் எஸ்.ஏ.சி.

இதுதான் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க விட்டிருக்கிறது. சொந்தமா ஒரு சைக்கிள் கம்பெனி நம்மகிட்டயே இருக்கு. அதைவிட்டுட்டு, இன்னொரு பிராண்ட் சைக்கிளுக்கு வௌம்பரம் பண்றாரே இவரு? என்பதுதான் அது. இதை கூட பொறுத்துக் கொள்ளலாம். அவர் ஏன் ரஜினி காலில் விழணும்? என்றும் பிய்த்து பீராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செய்யறதுன்னு முடிவு பண்ணியாச்சு. சேமியாவா இருந்தா என்ன? சேப்பங்கிழங்கா இருந்தா என்ன?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஸ்வாசம் படத்தில் காதல் கோட்டை அஜீத்!

https://www.youtube.com/watch?v=96s33emikIs

Close