விஜய் படத்தின் பெயர் ‘வேற லெவல் ’ இல்லையாம்! பின்னே?
விஜய் ஏ.ஆர்.முருதாஸ் இணையும் படத்தின் பெயர் என்ன? கடந்த 24 மணி நேரமாக ஜனங்களை போட்டு குழப்பி கும்மியடித்துக் கொண்டிருக்கிறது படக்குழு. இது வேற லெவல் என்று முதலில் கசியவிட்டார்கள். அதையும் உண்மை என்று நம்பி சோஷியல் மீடியா தெறித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இன்று மாலை டைட்டில் வெளியாகிவிடும். நாம் விசாரித்தவரை அதிகாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். விஜய்யின் அதிகாரம் என்று தலைப்பில் எழுதியிருப்பார்கள். படிக்கவே ஒரு கம்பீரமாக இருக்கும் அல்லவா?
‘தலைவா’ என்று என்று தலைப்பு வைத்தபோது அவரது படத்திற்கு முட்டுக்கட்டையிட்ட அப்போதைய அரசியல் இப்போது இல்லை. ஆனால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிகாரம் இந்த அதிகாரத்தை என்ன பண்ண காத்திருக்கிறார்களோ?
என்ன இருந்தாலும் இது சன் டிவி படமாச்சே. உள்ளே வந்து சலம்பல் விடுகிற தைரியம் இனி யாருக்கு வரும்?
கடைசி செய்தி-
நமக்கு தகவல் கொடுத்த புண்ணியவான்கள் எந்த அடிப்படையில் கொடுத்தார்களோ… அதிகாரபூர்வமாக, ‘சர்கார்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள். இதுவும் நல்லாதான் இருக்கு. ஆனால் சர்கார்ங்கறது தமிழ் இல்லையே தலைவா?
Gujayku Over sombu adikkarar Anthanar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்கள் வருகின்றது என்றால் ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பார்ப்பில் இருக்கும். அந்த வகையில் காலா படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 180 கோடிகளை எட்டிவிட்டதாம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக முறை ரூ 150 கோடியை தாண்டியது(எந்திரன், லிங்கா, கபாலி, காலா) ரஜினி மட்டுமே தானாம்.