தாயை தப்பா பேசுன மாதிரி உணர்றோம்… – இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேச்சு

இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறான முறையில் கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசின் செயல்பாட்டை கண்டித்து இன்று சென்னையிலிருக்கும் இலங்கை துதரகத்தின் வெளியே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், ஏராளமான நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டார்கள். முக்கியமாக நடிகர் விஜய், சூர்யா, உள்ளிட்ட இளம் முன்னணி ஹீரோக்களும் கலந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் தாணு, சீமான், நடிகர் சிவகுமார், இயக்குனர் ஏ.ஆர்முருகதாஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசின் செயலை ஆவேசமாக கண்டிக்கும் விதத்தில் முழக்கம் ஒலிக்கப்பட்டது.

இலங்கை அரசின் செயலை கண்டித்த நடிகர் விஜய், ‘ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்களின் கஷ்டத்தை தீர்க்க தமிழக முதல்வர் அம்மா நிறைய ஸ்டெப்ஸ் எடுத்துகிட்டு இருக்காங்க. அதை இலங்கை டிபெஃன்ஸ் வெப்சைட்ல கேலி செய்யுற மாதிரி ஒரு காமென்ட் பண்ணியிருக்காங்க. உண்மையிலேயே எங்க தாயை தப்பா பேசுன மாதிரி நாங்க உணர்றோம். இது ரொம்ப வருத்தத்தை தர்ற விஷயம். இதை நாங்க கடுமையா கண்டிக்கிறோம்’ என்று ஆவேசமாக பேசினார். மிக சுருக்கமாக தன் உரையை அவர் முடித்துக் கொண்டாலும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலை பத்து மணிக்கெல்லாம் வந்திருந்து, ஆர்ப்பாட்டம் முடியும்வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ராஜபக்சேவின் நண்பர் பங்குபெற்று தயாரித்து வரும் ‘கத்தி’ படத்தின் ஹீரோவான விஜய்யும், இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசும் அதே ராஜபக்சே அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை வியப்போடும் வேடிக்கையோடும் பார்க்க தவறவில்லை ரசிகர்கள். ஹ்ம்ம்ம்… இவர்களின் அடுத்தகட்ட ‘டிராமா’ எதுவோ?

1 Comment
  1. jessy says

    இருக்காதா பின்ன ?
    கத்தி ரிலீஸ் ஆக வேண்டாமா ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்…. இளையராஜா வேதனை!

அதிகம் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவரில்லை இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவர் ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது- கடந்த 1960 முதல் 1968-ம்...

Close