விஜய் சிபாரிசா? அட்லீக்கு 15 கோடி சம்பளம்!
இணக்கமான கூட்டணி அமைந்தால், ஈர்க்குச்சி கூட கடப்பாரை ஆகிவிடும்! அதுவும் சினிமாவில் மூட் அறிந்து நடக்கிற இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த வகையில் விஜய்யின் மனசில் வீடு கட்டி அமர்ந்துவிட்டார் அட்லீ!
தெறி படம் வெளிவருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கே சென்ற விஜய், “என்னோட பிறந்த நாள் கிஃப்ட் என் கால்ஷீட்தான். எனக்கு எப்போ அடுத்த கதை சொல்றீங்க?” என்று கேட்க, தன் ஆயுளில் ஒரு அறுபது வருஷத்தை ப்ளஸ் பண்ணிக் கொண்டார் அட்லீ. ஏழுமலையானே படியேறி வந்து, “எத்தனை கோடி வேணும் பக்தா?” என்று கேட்ட மாதிரியல்லவா இது?
ஆனால் அட்லீ மனசிலும் ஒரு அல்ப ஆசை இருந்தது. அந்த படத்தை நாமளே தயாரிச்சா அது இன்னும் பெருமையாச்சே என்பதுதான் அது. ஆனால் அதற்கெல்லாம் இன்னும் நேரம் காலம் வர வேண்டும் அல்லவா? ஆனால் தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு தான் கொடுத்திருந்த கால்ஷீட்டுக்கு அட்லீயை கோர்த்து விட்டார் விஜய். அதுமட்டுமல்ல, அவருக்கு 15 கோடி சம்பளத்தை பிக்ஸ் பண்ணிக் கொடுத்ததும் விஜய்தான் என்கிறது சினிமா வட்டாரம்.
பீட்சாவுக்கேத்த பில்லுதான்… விடுங்க!
To listen audio click below:-