தெறி படத்தில் விஜய் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா
எங்க வீட்டு ராசா என்று அவரவர் வாரிசுகளை அவரவர் கொண்டாடினாலும், அடுத்தவர்களையும் சேர்த்து கொண்டாட வைக்கிற அதிர்ஷ்டம் விஜய் அஜீத் மாதிரியான விஐபி குழந்தைகளுக்குதான் வாய்க்கும். அப்படியொரு வாய்ப்பை தன் ரசிகர்களுக்கு அவ்வப்போது கொடுத்து ஆனந்த கூத்தாட வைக்கிறார் விஜய். சிசிஎல் போட்டி நடைபெற்ற நேரத்தில் தன் மகனோடு கிரவுண்டுக்கு வந்த விஜய்யை, ஊரே கூடி ஒளி மின்னலால் கிளிக்கியதை அவ்வளவு லேசில் மறந்துவிட முடியாது. அதற்கப்புறம் அவர் விஜய்யுடன் சில பாடல் காட்சிகளில் தோன்றி பாராட்டுகளை அள்ளியிருக்கிறார்.
இப்போது தெறி படத்தில் அவர் நடித்தும் இருக்கிறாராம். மகன் மட்டுமல்ல, விஜயின் மகள் திவ்யா சாஷாவும் நடித்திருக்கிறாராம்.
திவ்யா சாஷா நடித்திருக்கும் இந்த தகவலை மிக மிக ரகசியமாகவே வைத்திருந்தார் அட்லீ. நேற்று அந்த ரகசியம் ஓப்ன்ன்ன்ன்ஸ்! தெறிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தது அப்படக்குழு. (பட் விஜய் மட்டும் உள்ளூரில் இருந்து கொண்டே ஆப்சென்ட்! ) எமி, மீனா, நைனிகா இவர்களுடன் அட்லீ… நிறைய பேசியதும் இயக்குனர் என்ற முறையில் அட்லீதான்.
இந்த படத்திற்கு பார்ட் 2 வருமா, வராதா என்பதெல்லாம் இந்த படத்தின் வெற்றிக்குப் பின் பேசுனாதான் சரியா இருக்கும். இப்போதைக்கு வேண்டாம் என்றவரிடம், பிரமோஷன்களில் நைனிகாவைதான் நிறைய காட்றீங்க? சமந்தா எமியெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்களா? என்றொரு கேள்வி பறந்தது. சார்.. நாங்க பர்ப்பசாகவேதான் அப்படி பண்றோம். இந்த படத்தில் நைனிகாவின் நடிப்பு பிரமாதம்னு நீங்களே சொல்வீங்க. அதுமட்டுமல்ல, குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் என்பதால்தான் நைனிகாவை முன்னிறுத்தி வருகிறோம் என்றார் அட்லீ. படத்தில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா நடிச்சிருக்காராம்ல? என்ற இன்னொரு கேள்விக்கு, சடக்கென்று பிரேக் போட்டு பின் வேகமெடுத்தார் அட்லீ.
“நாங்க சஸ்பென்சா வச்சுருந்தோம். நீங்க இப்போ கேட்டுட்டீங்க…” என்றவர் அதற்கப்புறம் அதை நீட்டி முழக்காமல் அடுத்த கேள்விக்கு தாவினார். (சஸ்பென்ஸ்சை ரொம்ப உடைக்க வேண்டாம் என்பதால் இருக்கலாமோ?)