பணிவான வணக்கம்! பவ்யமான விசாரிப்பு! மாறியது நெஞ்சம், மாற்றியது யாரோ?

இன்றளவும் ‘புது இயக்குனர்களின் பூமத்திய ரேகை, அறிமுக இயக்குனர்களின் ஆயுள் காப்பீடு’ என்று கோடம்பாக்கத்தில் வர்ணிக்கப்படுகிறார் விஜய். காரணம்… உச்சாணிக் கொம்பை பிடித்துவிட்ட பின், ‘அறிமுக இயக்குனர்களுக்கு கேட் ஓப்பன் இல்லை’ என்று போர்டு வைக்காத குறையாக விரட்டுவார்கள் டாப் டாப் ஹீரோக்கள். அந்த குட்டிக்கரண கோட்பாடுகளையெல்லாம் கூச்சமில்லாமல் உடைத்துத் தள்ளியவர் விஜய் என்பதால்தான் இத்தகைய பாராட்டு.

இந்த பாராட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கதை கேட்கும்போது ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லாமல் அமைதியாக இருப்பார். அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரே ரிசல்ட் சொல்கிற வரைக்கும் புரிந்து கொள்ள முடியாது என்கிற வருத்தம் எல்லா இயக்குனர்களுக்கும் உண்டு. ஆனால் அந்த விஜய்யை இப்போது தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது என்கிற அளவுக்கு ஆளே மாறிப் போய்விட்டாராம். தன்னைவிட சின்னவர்களோ, பெரியவர்களோ, நேருக்கு நேர் பார்த்தால் நின்று ஒரு வணக்கம் போடுவது. நல்லாயிருக்கீங்களா என்று விசாரிப்பது என்று பெருமளவு மாறிவிட்டார் விஜய் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் தெறி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இதை கண் கூடாகவே காண முடிந்தது.

பெரும் கூட்டத்தில் உட்கார கூட இடமில்லாமல் நின்று கொண்டிருந்தார் வளர்ந்து வரும் இளம் நடிகரும், இறுதிச்சுற்று புகழ் அப்பாவுமான காளி வெங்கட். சட்டென்று அவரை கவனித்துவிட்ட விஜய், மெல்ல அருகில் வந்து “வணங்கங்ணா… நல்லாயிருக்கீங்களா?” என்று நலம் விசாரித்துவிட்டுப் போக காளிக்கே வியப்பு. அதைவிட பெரிய வியப்பு, வினாடி நேரத்தில் அதை கவனித்த சிலருக்கு. விஜய், தெறி யூனிட்டிலும் கூட அப்படிதான் நடந்து கொள்வதாக வர்ணிக்கிறது தொழிலாளர் வர்க்கம்.

ங்ணா… என்னங்ணா ஆச்சு உங்களுக்கு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்! எதையும் மறைக்கப் போவதில்லை என அறிவிப்பு

எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி...

Close