காக்கி சட்டைக்காக காத்திருந்தேன்! ஆசையை டச் பண்ணிய விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் சேதுபதி! (அட.. அவர் பேர்லேயே பாதி?) “எவ்ளோ தலைப்புகளை யோசிச்சோம். எதுவும் சூட்டாவுல. கடைசியா சேதுபதின்னே வச்சுடலாம்னு டைரக்டர் சு.அருண்குமார் சொன்னப்ப, அதுவும் சரின்னு தோணுச்சு. அப்புறம் முறைப்படி ஏவிஎம்ல கேட்டு இந்த தலைப்புக்கு அனுமதி வாங்குனோம்” என்றார் விஜய் சேதுபதி. இதே தலைப்பில் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தை ஏ.வி.எம் தயாரித்திருக்கிறது.

பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய சு.அருண்குமார்தான் இந்த படத்திற்கும் இயக்குனர், அந்த படத்திற்கு அப்படியே நேர் எதிராக ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் உருவாகி வருகிறதாம்.

“போலீஸ் கதைன்னாலே ஒண்ணு ஹரி ஸ்டைல். இல்லேன்னா கவுதம்மேனன் ஸ்டைலைதான் சொல்வாங்க. இந்த படம் யாருடைய ஸ்டைல்ல இருக்கும்? இந்த கேள்வியை கொஞ்சம் வேகமாகவே எதிர்கொண்டார் விஜய் சேதுபதி. “ஏன் சார்… போலீஸ் கதையை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்காங்க. சத்யம் கூட பிரமாதமான போலீஸ் ஸ்டோரிதான். இந்த படம் யார் ஸ்டைலும் இல்லாம தனியா இருக்கும். முக்கியமா ஒரு விறுவிறுப்பான போலீஸ் கதையை யதார்த்தம் மீறாம சொல்லியிருக்கோம். வழக்கமா போலீசுக்கு எதிரா ஒரு அரசியல்வாதி வருவார். மோதல் நடக்கும். இந்த படத்துல அப்படியெதுவும் இல்ல”

“நிறைய படங்கள்ல போலீஸ் யூனிபார்ம்ல வர்ற மாதிரி கெஸ்ட் ரோலுக்கு கூப்பிட்டிருக்காங்க. பண்ணினா மனசுல நிக்கிற மாதிரி ஒரு போலீஸ் கதை பண்ணணும். நடுவுல கெஸ்ட் ரோல்ல நடிச்சு அந்த இம்பாக்ட்டை கெடுத்துக்கக் கூடாதுன்னு காத்திருந்தேன். இப்போ சரியான கதையை அமைஞ்சுருக்கு” என்றார் விஜய் சேதுபதி.

படத்தில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்கள் விஜய் சேதுபதியும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீசனும். முதலில் சில ஹீரோயின்களை அப்ரோச் பண்ணியபோது, “இரண்டு குழந்தைக்கு அம்மாவா? நான் மாட்டேன்” என்று ஓடிய நடிகைகள்தான் அதிகமாம். ஆனால் கேரக்டரின் அழுத்தம் புரிந்து ஒப்புக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

பீட்சா ஜோடி. ருசி நல்லாதான் இருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!

இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்... லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர்....

Close