கள்ளக்காதல்? வில்லனை நல்வழி படுத்த முயலும் பெரிய ஹீரோ!

இந்த செய்தியில் யார் பெயரையும் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால் விவகாரம் ரொம்பவே டேஞ்சர். “நீங்க சொல்லப்போறஅந்த நடிகர் மூன்றெழுத்து ஷ் மருமகனா?” என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு, “இது அவரல்ல. அவர் படத்தில் வில்லனாக நடித்த இளம் நடிகர்” என்பதுதான் இப்போதைய வாய்ப்பூட்டு.

‘பட்டதாரி’ போல பளிச்சென்று இருக்கிற அந்த யங் பாய்க்கு வேலையிருந்தது. ஏனென்றால் அவர் பெரிய ரியல் எஸ்டேட் அதிபரின் மகன், பெரிய நடிகரின் பிறந்த ஊரான கர்நாடகாவை சேர்ந்தவர். இந்த யங் பாயின் அப்பாவும் பெரிய நடிகரும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாம். தனது மகனை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்த வந்த அந்த அப்பா, “என் பையனை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று கூறி அவர் பிளசிங்ஸ்சுடன்தான் வில்லனாக நடிக்க வைத்தார். அதற்கப்புறம் அப்படத்தின் ஹீரோவுக்கும் இவருக்கும் நல்ல பிரண்ட்ஷிப் வந்துவிட்டதாம். தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும். வில்லனாக நடித்தாலும் பரவாயில்லை என்ற ஆசையில் ஹீரோவை சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில்தான் மாரி மாரி (ஸ்பெல்லிங் மிஸ்டேக்?) அட்வைஸ் பண்ண விரும்பாத ஹீரோ, தனது இரண்டெழுத்து ரவுடி படத்தில் இவருக்கு தருவதாக இருந்த கேரக்டரை அந்த பாடகருக்கு கொடுத்துவிட்டார். இருந்தாலும் பழக்க தோஷத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் வில்லனை அடக்காமல் விட்டதன் விளைவை இப்போது இரண்டு குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன. பாடகருடன் வந்து கொண்டிருந்த அவரது மனைவிக்கும் வில்லனுக்கும் லவ் ஆகிவிட்டதாம். இத்தனைக்கும் இரண்டு குழந்தைகள் இந்த தம்பதிக்கு.

லவ் முற்றி கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் போய்விட்டாராம் வில்லன். நான் அவரோடவே குழந்தைகளையும் கூட்டிட்டு போயிடுறேன் என்று கதறுகிறாராம் பாடகரின் மனைவி.

பிரச்சனையை பெரிய நடிகரிடம் கொண்டு போயிருக்கிறார்கள். பதறிப் போன அவர், “தம்பி… எப்படியொரு தெய்வீகமான பேமிலியில கை வச்சுருக்கே தெரியுமா? எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிடு” என்று அட்வைஸ் செய்தாராம். கூடவே அவரது மனைவியும் தன் பங்குக்கு படித்து படித்து போதித்திருக்கிறார். வில்லன் கேட்டால்தானே?

நல்லவரின் ஆசிர்வாதத்தோடு வந்தவர், இப்படி பாழாய் போய்விட்டது கூட பிரச்சனையில்லை. அடுத்தவர் பேமிலியையும் பாழாக்கிவிட்டாரே என்பதுதான் பேரதிர்ச்சி.

5 Comments
 1. it says

  it’s darshini and vijay yesudas. who’s the villain?

 2. nospam says

  who is this please? Does anybody know? please comment.

 3. alam says

  #Vip villaikum #maari villain wifekum love crct ah

 4. senthil says

  This is the guy who did Villain Character in Vellailla Pattathari

 5. VIP says

  Amitash Pradhan, born in Dharwad, Amul baby in VIP

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலிக்கு ட்ரபுள்? ஆரம்பித்தது அரசியல்!

‘சொரியாசிஸ் வந்தவன் நகம் வளர்த்தேயாகணும்’ என்பது தலையெழுத்து! அரசியல் ஆசை இருக்கிற அத்தனை நடிகர்களுக்கும் சொரியாசிஸ் நிலைமைதான்! எதிர்ப்பை சமாளிக்கிற வித்தை தெரிந்திருந்தாலொழிய நிம்மதியாக உறங்கக் கூட...

Close