எச் ராஜா மீது வழக்கு! விஷால் முடிவு
அதுவாகவே அடங்கிருக்கும். ஆனால் குத்தல் குடைச்சல் போன்ற சகலவிதமான இம்சைகளுக்கு ஆளாக்கியதால் மெர்சலும், அதில் வரும் ஜி.எஸ்.டி வசனமும் இன்று கடைகோடி தமிழன் வரைக்கும் சென்று சேர்ந்துவிட்டது. இப்படியொரு அருமையான வேலையை செய்த தமிழக பி.ஜே.பி க்கு தயாரிப்பாளர் தனியாக ஒரு பாலாபிஷகமே செய்யலாம். அந்தளவுக்கு மெர்சல் படத்திற்கு இலவச பப்ளிசிடி கொடுத்துவிட்டது அக்கட்சி.
அதைவிட சிறப்பு அக்கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜாவின் பேட்டி. புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டியளித்த ராஜா, தான் அப்படத்தை ஆன் லைன் மூலம் பார்த்ததாக குறிப்பிட, கோடம்பாக்கத்தில் கடும் புகைச்சல்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் விஷால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்-
“ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை”.
“எச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வளவு கோபத்துடன் விஷால் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பிரச்சனை அதோடு முடிவதாக தெரியவில்லை. நமக்கு கிடைத்த தகவல்படி எச். ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரவும் முடிவெடுத்திருக்கிறாராம் விஷால்.
கட்சிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த எச்.ராஜா அண் கோவுக்கு பிரதமர் மோடி என்ன பரிசு கொடுக்கப் போகிறாரோ?
https://youtu.be/LhnoAkTrSzY