பொறுப்புணர்ச்சி இஸ் ஈக்குவல் டூ விஷால்! மனுஷன்னா ஒரு மனசு வேணும்ல….?

விஷாலுக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சிக்கு ஊரே சேர்ந்து ஒரு ஓ…. போட்டால் கூட தப்பில்லை. ஏன்? அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பாயும் புலி படத்தின் பின்னணி கதையை கேட்டால் அப்படிதான் தோன்றுகிறது. வேறொன்றுமில்லை, இந்த படத்தை தயாரிக்கும் இதே வேந்தர் மூவிஸ் விஷால் நடித்த இரண்டு படங்களை விநியோகம் செய்தது. இரண்டுமே நஷ்ட கணக்குதானாம். ‘என்னால உங்க பாக்கெட்ல எதுக்கு ஓட்டை விழணும்?. நான் ஏத்துக்குறேன் அந்த நஷ்டத்தை’ என்றவர், மிக குறைந்த சம்பளத்தில் நடிக்கும் படம்தான் இந்த பாயும் புலி என்கிறார்கள் இந்த படம் குறித்த பின்னணி அறிந்தவர்கள்.

பாயும்புலி படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்தது. இந்த முன் சோகம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிக மிக உற்சாகமாக இருந்தார் விஷால். படத்தின் நாயகி காஜல் அகர்வால் தவிர, மற்ற அனைவரும் ஆஜர் ஆகியிருந்தார்கள். முக்கியமாக சூரி. பொதுவாக சுசீந்திரன் படம் என்றால் சூரியும் இருப்பார் என்பது எழுதப்படாத விதி. ‘வெண்ணிலா கபடிக் குழு படத்துல என்னை கைய புடிச்சு அழைச்சுட்டு வந்து விட்டாரு. இன்னைய வரைக்கும் அந்த கைய விடல. நான் சூரியண்ணனுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கிறேன்’ என்றார் சூரி.

என்னதான் காமெடியனாக இருந்தாலும் அவருக்குள்ளும் ஒரு ரொமான்ட்டிக் ஹீரோ இருப்பார்தானே? அந்த மூவ்மென்ட்டையும் அவரே கூட்டத்தில் போட்டு உடைத்தார்.

நான் இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகியக்காவுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். எல்லா படத்துலேயும் எனக்கு ஒரு அழுக்கு லுங்கியும் ஒரு கட்டம் போட்ட சட்டையும்தான் கொடுப்பாங்க. இந்த படத்துல எனக்கு காஸ்ட்லி பேண்ட், காஸ்ட்லி ஷர்ட், ஷுன்னு அமர்க்களப்படுத்திட்டாங்க. முதல்ல இதெல்லாம் எனக்கா இருக்காதுன்னு நினைச்சேன். அப்புறம் அவங்க சொன்னதும் என்னால சந்தோஷத்தை தாங்கிக்க முடியல என்றார்.

‘நான் இதுவரைக்கும் மூணு போலீஸ் கதைகள்ல நடிச்சுருக்கேன். இந்த கதை கொஞ்சம் ஸ்பெஷல்தான் எனக்கு’ என்றார் விஷால். என்னவோ கொஞ்ச நாளா ஸ்பெஷலாதான் திரியுறாரு விஷாலண்ணன்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எம்.எஸ்.வி யின் தாக்கம்தான் நான்! இளையராஜா உருக்கம்!

ஜூபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார்....

Close