இனி எதற்கும் அஜீத்தை நாடப் போவதில்லை! விஷால் அமைப்பு ரகசிய முடிவா?
யாராலும் அசைக்க முடியாத இடத்தை சற்றேயல்ல, ரொம்ப ஸ்டிராங்காகவே அசைத்துவிட்டது விஷால் அணி. ராதாரவியின் செல்வாக்கில் செய்யப்பட்டிருந்த முப்பதாண்டு கால நாற்காலியை பிடுங்குவது என்பது அவ்வளவு ஈசியான விஷயமல்லவே?
“உலக வரைபடத்தோடு ஒப்பிட்டால், தமிழ்நாடு ஒரு புள்ளிகூட இல்லை. நடிகர் சங்கம் அது கூட இல்லை. ஆனால் அதை உலகம் முழுக்க தெரிய வைத்தது மீடியாதான்” என்று நக்கலாகவும், வருத்தமாகவும் பேசுகிற அளவுக்கு சரத்குமாரை கவலையில் ஆழ்த்தியது மீடியா. அதே மீடியா பலத்தால் வெற்றியும் பெற்றுவிட்டது விஷால் அணி. சந்தோஷம். இந்த நேரத்தில் அவர்களை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை ஆற அமர உட்கார்ந்து பேசினார்களாம் அவர்கள். அதில்தான் அஜீத் பற்றியும் பேச்சு வந்திருக்கிறது.
ஓட்டு கேட்க வருகிறோம் என்று அப்பாயின்மென்ட் கேட்ட இரு அணிகளையும் “வராதீங்க ப்ளீஸ்” என்று கூறிவிட்டார் அஜீத். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. இந்த நடிகர் சங்க தேர்தலையே புறக்கணித்துவிட்டார். தனது காலில் அடிபட்டிருப்பதாக ஒரு பொய் காரணத்தை அவர் கூறிவிட்டதாகவும் வருந்துகிறதாம் விஷால் அணி. தற்போது தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்ட இவர்கள், இனி எதிர்காலத்தில் நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால் கூட, நடிகர் சங்கம் சார்பில் அஜீத்தை அழைப்பதில்லை. மற்றும் எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது என்றும் ஆவேசப்பட்டார்களாம்.
இந்த தகவல் அஜீத் காதுகளுக்கு செல்ல, இடது உதட்டோரம் லைட்டாக ஒரு புன்னகையை வீசிவிட்டு நடையை கட்டிவிட்டாராம். எதிர்காலத்தில் நிறைய பரபரப்பு ஏற்படலாம் என்பதே இப்போதைய யூகம்!
Whatever ajith did is the right thing. They have gone beyond norm.Now everyone is laughing what they have done. They pull each others leg and went even worst with their languages in public. I hope ajith strict to his policy. Also the people who won, their political agenda was help the poor actors. First they should do that, not taking revenge on others. Damage is already done. Its divided. Vishal/Saran its shame on both.
Kudiya sekkaram vishal Ku our madurai sambavam confirm
அஜித் தான் ஒரு மலையாளி என்பதை பலமுறை நீருபித்து விட்டான். ஆனால் சில ஊடகங்களும், சில முட்டாள் ரசிகர்களும் தான் அந்த தருதல பின்னால் உள்ளனர். உண்மையான தமிழர்கள் அவன் படத்தை பார்க்க வேண்டாம்.
வாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.