பேட்ட அறிவிப்பு! புதுப்பேட்ட என்னாகும்?

கபாலியில் அதிர்ச்சியாகி, காலாவில் ஸ்டடியாகி, பேட்ட-யில் நிதானமாகிவிட்டான் ரஜினி ரசிகன். “நல்லா போயிட்டு இருந்த ரஜினி வியாபாரத்தை, குந்துனாப்ல குழியில் தள்ளிட்டாரு ரஞ்சித். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் என்ன பண்ணப்போறாரோன்னு திகைப்பா இருந்தோம். ஆனால் தலைப்பே செம மாஸ்” என்கிறார் திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவர். யெஸ்… திரையுலகத்தையும் உலகம் முழுக்க இருக்கும் ரஜினி ரசிகர்களையும் ஒரு சேர திருப்தி படுத்திவிட்டது பேட்ட-யின் முதல் லுக்! லுக் மட்டுமா, அந்த தலைப்பும்தான்!

கதைப்படி ரஜினி கல்லூரி வார்டனாம். அதுவும் முழு கதையும் ஊட்டியில் நடப்பதாக கூறுகிறார்கள். அப்படின்னா இந்த பேட்ட எப்படி கதையுடன் பொருந்தும் என்பதற்கெல்லாம் தனி ட்ரீட்மென்ட் வைத்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ். அவரது ஜிகிர்தண்டா நம்பிக்கையை அப்படியே இந்தப்படத்தில் வைத்திருந்தால், மீண்டும் ரஜினியை கொண்டாட ஆரம்பித்துவிடும் ஊர் உலகம். அவர் என்ன பண்ண காத்திருக்கிறாரோ?

அதை விடுங்கள்… பல வருஷங்களாகவே ஒரு செய்தி அடிபட்டு நசுங்கி ஓரமாக கிடக்கிறது. தனுஷின் புதுப்பேட்டை படத்தின் பார்ட் 2 வரப்போகுது. அதற்கான வேலைகள் ஒரு ஓரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த செய்தி. தற்போது தனுஷின் மாமனார் ‘பேட்ட’ துள்ளல் போட்ட பின்பு, புதுப்பேட்ட என்னாகும்? வருமா, அல்லது வேறு பெயரில் வருமா?

இப்படியெல்லாம் கேள்விகள் இருக்கிறது. கடந்த இரண்டு படங்களாக கட்டாந் தரையாகிவிட்ட ரஜினியின் சினிமா பாதையில் மீண்டும் புல் முளைக்கட்டும். அப்புறம் பார்க்கலாம் மற்றதெல்லாம்!

1 Comment
  1. செந்தமிழன் says

    எங்க தலைவர் ரஜினி தாண்டா தமிழகத்தின் அடுத்த முதல்வர்.
    நீ என்ன தான் தலைவர் ரஜினிக்கு எதிராக, காசு வாங்கி கொண்டு குவினாலும், தமிழக மக்களின் இதய சிம்மாசனத்தில் என்றும் என்றென்றும் வீற்று இருப்பவர் எங்கள் இறைவன் ரஜினி தாண்ட.
    பேட்ட தான் தமிழகத்தின் கோட்டை .
    வாழ்க கலியுக தெய்வம் ரஜினி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்டு!

Close