ஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்! விஜய்யின் முடிவு என்ன?

சந்திராயன் 2 க்கு போட்டி எது? இந்த கேள்விக்கு விஜய் ரசிகர்களாக இருந்தால் இப்படிதான் பதில் சொல்வார்கள்.

“எங்க தளபதிதான்!”

‘ஓடுனாதான் நதி. உட்கார்ந்தா பின்னால ஏதோ ஒரு சதி’ என்பதை மூளைக்குள் பிக்ஸ் பண்ணிக் கொண்டு ஓடுவதில் விஜய் ஒரு காட்டுக்குதிரை! விஜய் 64 க்கு பின் யாருடைய காம்பினேஷன் என்பதை கூட இப்பவே தீர்மானித்துவிட்டாராம். அவரது லிஸ்ட்டில் பிரபல பசை பார்ட்டி ஐசரி கணேஷ் இருக்கிறாரா என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி.

சமீபத்தில் ஒரு விருந்தில் கலந்து கொண்டாராம் விஜய். அப்போது அங்கு வந்த ஐசரி கணேஷ், “எங்க நிறுவனத்திற்கு நீங்க ஒரு படம் பண்ணித்தரணும்” என்று வேண்டுகோள் வைக்க, மையமாக புன்னகைத்தாராம் விஜய்.

தமிழ்சினிமாவில் 100 கோடி முதலீடு என்றாலும் வேறொரு பைனான்சியரிடம் கையேந்தி நிற்காமல் லாக்கரை ஓப்பன் பண்ணி மயக்கம் வரவழைக்கும் ஒரு சிலரில் ஐசரியும் ஒருவர். அப்படிப்பட்ட ஒருவருக்கு படம் நடித்துத் தருவதில் என்ன தயக்கம் விஜய்க்கு?

அங்குதான் ஒரு டேஷ் போடுகிறான் அத்திவரதன்… டவுன் ஆஃப் காஞ்சிபுரம்!

ஐசரி கணேஷ் மனதில் பி.ஜே.பி யில் இணையும் திட்டம் ஒன்று இருக்கிறதாம். தமிழ்நாட்டில் பி.ஜே.பி யை திட்டினால் தொட்டில் குழந்தை கூட கைதட்டி கொண்டாடக் கூடிய நிலைமை இருப்பதால், இந்த பொருந்தா அரசியல்வாதியுடன் விருந்து சாப்பிடுவது தப்பாச்சே? விஜய்யின் இப்போதைய பதில் ‘ஆகட்டும்… பார்க்கலாம்’ என்பதே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நேர்கொண்ட பார்வை பிசினஸ் – ரகசியம் உடைக்கும் தயாரிப்பாளர்

https://www.youtube.com/watch?v=JsnEQWBglCc

Close