ஆசை இருக்கு தாசில் பண்ண… அதிர்ஷ்டம் இருக்கு பூனை மேய்க்க?
வியப்பு, விசித்திரம், ஆச்சர்யம், அதிர்ச்சி… இப்படி எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். “வருங்கால சி.எம். கேன்டிடேட் இப்படியா நடந்து கொள்வார்?” என்று மோவாயில் முகரை கட்டையை வைத்து இடித்துக் கொள்கிறது கோடம்பாக்கம். எல்லாம் விஜய்யின் பாராமுகம் காரணமாகதான்!
இந்த கட்டுரையை எழுத துவங்குவதற்கு முன் நாம் கொஞ்சம் பழசை கிளற வேண்டியிருக்கிறது. ரஜினி கொடி கட்டி பறந்த நேரம் அது. (இப்பவும் கொடி கட்டிதான் பறக்கிறார். இருந்தாலும்….) உழைப்பாளி படத்தை வெளியிடுகிற நேரத்தில் ஒரு முட்டுக்கட்டை விழுந்தது ரஜினிக்கு. சிந்தாமணி முருகேசன் என்ற செல்வாக்கான ஒரு விநியோகஸ்தர் இருந்தார், அவர்தான் அப்போதைய விநியோகஸ்தர் சங்க தலைவரும் கூட. ரஜினிக்கு ரெட் போடுவோம் என்று கூறிவிட்டார். அதாவது ரஜினியின் உழைப்பாளி படத்தை எந்த திரையரங்கத்திலும் வெளியிட மாட்டோம் என்பதுதான் அந்த ரெட்டின் அர்த்தம்.
ரஜினி என்ன செய்தார் தெரியுமா? “நீ என்ன எனக்கு ரெட் போடறது? நான் நேரடியாக தியேட்டர் காரர்களிடம் பேசி என் படத்தை வெளியிட்டுக் கொள்கிறேன். முடிஞ்சா உங்களால் தடுக்க முடியுமா பாருங்க” என்று சவால் விட்டுவிட்டார். நெட் ரிசல்ட்? பஞ்சு பஞ்சாக பிசுபிசுத்துப் போனது ரெட் அலர்ட்! விஜயகாந்தும் அப்படிதான். ஒரு முடிவெடுத்துவிட்டால் அந்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கவே மாட்டார். அவர் டீல் பண்ணாத பஞ்சாயத்துக்களே இல்லை. எத்தனையோ இடர்பாடுகளை லெஃப்ட் ஹேண்டால் டீல் பண்ணியவர் அவர்.
இங்குதான் அடுத்த முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் விஜய்க்கும் தலை போகிற பிரச்சனை வந்து தாளித்துக் கொண்டிருக்கிறது. தெறி படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட மாட்டோம் என்று நெஞ்சை புடைத்துக் கொண்டு நிற்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும். பிரச்சனை மெல்ல வீரியம் ஆகி தமிழ்சினிமாவில் ஸ்டிரைக் நடக்குமோ என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள், தலைவன் படத்தை பார்க்க முடியலையே என்று கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். இந்த நேரத்தில் என்ன செய்திருக்க வேண்டும் விஜய்?
தயாரிப்பாளர் தாணுவையும், சண்டை கட்டும் தியேட்டர் அதிபர் சங்க பன்னீர் செல்வத்தையும் வரச்சொல்லி ஒரே சிட்டிங்கில் பேசி சமாதானத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? விஜய் அழைக்கிறார் என்றால் தாணுவோ, பன்னீர் செல்வமோ முடியாது என்றா கூறப்போகிறார்கள்?
ஜஸ்ட் லைக் தட்… போகிற போக்கில் சமாளிக்க வேண்டிய ஒரு பிரச்சனையை கூட சமாளிக்க முடியாமல் ஓடி ஒளிகிற விஜய், நாளைய முதல்வர் வேட்பாளர் என்றால் சிரிப்புதான் வருகிறது. ஒரு பக்கம் இந்த பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கிற நேரத்தில்தான் தெறி படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள வருகிறார் அவர். இதற்கு அவர் மனம் கூசவில்லையா என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. இதை பற்றி எழுதும் ஒரு சிலரை கூட ‘நாயே பேயே’ என்று திட்டக் கிளம்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.
கலி காலம்டா பெருமாளே…
Naaye..peiyeee
கலைபுளி தாணு நம்பர் ஒன் டுபாக்கூர், உலக பொறுக்கி டி சிவா, உங்க மனச தொட்டு சொலுங்க, இந்த பிரச்சினையை பத்தி நடுநிலைமையா எழுத முடியுமா உங்களால். நல்லவர் நாசர் இதுக்கு உடந்தை. டைமண்ட் பாபு கோவிச்சுப்பார்..
திரு.டண்டனக்கா சொல்வது மிகவும் சரி..
இவர்களை பற்றி நன்கு தெரிந்ததால் தான் விஜய் தலையிடாமல் இருக்கிறார்.
கண்டிப்பாக இந்த திருட்டு புலி தாணுவால் ரஜினிக்கு கபாலியில் அசிங்கம் வரும்,
பாவம் அவர்.