நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு! யாருக்கு நஷ்டம்? யாருக்கு லாபம்?
தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு நடிகர் சங்கம்தான். “எனக்கும் அங்க ஒரு இடம் இருக்கு” என்று கோட்டை பக்கமாக சுற்றி வரும் இன்னும் சிலரையும் உள்ளடக்கி, சற்றே திமிரோடு நிற்கிற இடமும் நடிகர் சங்கம்தான். இந்த சங்கத்திலிருப்பதே பெருமை என்று காலரை தூக்கிவிட்டு திரியும் பலருக்கும் நேற்று தலை சுற்றி கிர்ரென ஆகியிருக்கும். ஏனென்றால், சிம்பு ‘நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன்’ என்று அறிவித்திருப்பதுதான். அதற்கான கடிதத்தை இன்னும் முறைப்படி அவர் சங்கத்தில் கொடுக்கவில்லை. இன்னும் இரண்டொரு நாளில் அது தபாலில் வந்து சேரக்கூடும்.
“நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் நடிகர்களுக்கு இருக்கிற இமேஜையே கெடுத்துவிட்டீர்கள். இனிமேலும் அந்த சங்கத்திலிருக்க வேண்டுமா?” என்பதுதான் சிம்புவின் கேள்வி! அதுமட்டுமல்ல. “பீப் சாங் பிரச்சனையில் எனக்காக சங்கம் என்ன செய்தது? நான் ஏன் அதில் இருக்க வேண்டும்?” என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் சிம்பு.
இதற்கெல்லாம் நடிகர் சங்கம்தான் பதில் சொல்ல வேண்டும். என்றாலும், பழைய விஷயத்தை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? பீப் பாடல் பிரச்சனையின்போது, விஷாலே நேரடியாக சிம்புவுக்கு பேசியதாகவும், என் பிரச்சனையை நான் பார்த்துக்குறேன். நீங்க தலையிட வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாகவும் விஷாலே பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். அதன் வீடியோ பதிவு இப்போதும் யு ட்யூப் சேனல்களில் இருக்கிறது. உண்மை இப்படியிருக்க, சிம்புவின் இந்த காரணம் புஸ்சாகிவிட்டது.
நடிகர்களுக்கு இருக்கிற இமேஜ் நட்சத்திர கிரிக்கெட்டின் போது கெட்டுப் போய்விட்டதாக அவர் சொல்வது இரண்டாவது காரணம். பொதுவாகவே நடிகர் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் இமேஜ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பேசினால் அது கலகத்தில் முடியும். ஆனால் சிம்புவுக்கு என்ன மாதிரியான இமேஜ் இருக்கிறது என்பதை அவர் வீட்டை விட்டு வெளியில் வந்து மாறுவேடத்தில் சுற்றினால் கண்கூடாக அறிந்து கொள்ள முடியும். எந்த வகையிலும் அவருக்கென இருக்கும் இமேஜை கங்கை நீரை கார்ப்பரேஷன் லாரியில் பிடித்து வந்து கொட்டினாலும் கழுவவே முடியாது. இமேஜ் பற்றி சிம்பு பேசுவதுதான் வேடிக்கையிலும்வேடிக்கை.
சிம்பு படங்கள் வெளியாகும்போதெல்லாம் நடிகர் சங்க செயலாளரோ, தலைவரோ தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரடியாக சென்று, “சிம்பு பஞ்சாயத்தை கொஞ்சம் தீர்த்து வைங்க” என்று கேட்பது வாடிக்கையாக இருக்கிறது. இனிமேல் சிம்பு பட விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் எவரும் எங்கும் போய் பஞ்சாயத்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அந்த வகையில் சிம்புவின் விலகல், நடிகர் சங்கத்திற்கு நல்லதுதான்.
சிம்புவுக்கு நல்லதா? பொதுவாகவே ஒரு பழமொழி உண்டு. துஷ்டனை கண்டால் தூர விலகு. அந்த வகையில் பார்த்தால், தப்பி தவறி கூட விஷால், கார்த்தி, நாசர் முகத்தில் விழிக்க வேண்டாமே! அப்படின்னா இது சிம்புவுக்கும் நல்லதுதான்!
பின்குறிப்பு- நேற்று முதலே வாட்ஸ் ஆப்பில் ஒரு காமென்ட் ஓடிக் கொண்டிருக்கிறது. “சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகியதற்கு பதிலாக நடிப்பதிலிருந்தே விலகிவிட்டால், பல தயாரிப்பாளர்கள் பிழைத்துப் போவார்களே…முதலில் சிம்பு அதை செய்யட்டும்” என்று! இதைதான் நொற நாட்டியம் என்கிறது ஊர் உலகம்!
சிம்பு வின் பீப் சாங் சரி என்று நடிகர் சங்கம் சொல்லவில்லையாம்.மீண்டும் மீண்டும் பீப் பாடல் பட உதவி செய்ய வில்லையாம். அது தான் சிம்பு கொவிச்சுட்டார்.நடிகர் சங்கம் ஏன் இப்படி செய்கிறீங்க ?
தம்பிக்கு பீப் பட்டு பாட சங்க நிதியில் கொஞ்சம் காசு குடுத்து ஆதரவு தெரிவியுங்கோ