அநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்! ஏனிந்த திடீர் மாற்றம்?

“கடுங் காட்ல தவம் இருந்தாலும், கண்ல மாட்டுவாங்களா ரஜினியும் அஜீத்தும்?” இப்படியொரு ஆறாத வருத்தத்தில் இருக்கிறது பத்திரிகையாளர்கள் மனசு. கேள்விகள் நிறைய இருந்தாலும், முட்டு சுவத்துல கேட்குற மாதிரி சத்தம் போட்டு கேட்டுட்டு திரும்பிட வேண்டியதுதான். இவங்களை எப்ப பார்க்கறது? இவங்ககிட்ட எப்ப கேட்கிறது என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்து பல வருஷம் ஆச்சு.

அவ்வப்போது பிரஸ்சை மீட் பண்ணிக் கொண்டிருந்த விஜய்யும், ரஜினி அஜீத்தை பார்த்து ‘நாமளும் இதே ஸ்டைல்ல போவோம்’ என்று அந்த முடிவுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக அவர் மனசுக்குள் ஒரு மாற்றம். முன்னை விட சற்று கலகலப்பாகிவிட்டார் என்கிறது கோடம்பாக்கம். பிரஸ்சைதான் பார்ப்போமே, என்ன நடந்துவிடும்? என்று நினைத்தார் அவரும். எப்படியோ கடந்த வாரத்தில் எல்லாரையும் அழைத்து, “சும்மா பார்த்துட்டு போவலாம்னு வரச்சொன்னேன். நோ கொஸ்டீன். நோ ஆன்சர்” என்று தோள் மேல் கைபோட்டு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில்தான் கடந்த பல வருடங்களாக ரஜினியை மீட் பண்ணாமலிருந்த விஜய், அவரை நேருக்கு நேர் மீட் பண்ணிவிட்டார். கபாலி ரிலீஸ் சமயத்தில் விஜய் ரசிகர்கள் அப்படத்திற்கு எதிராக போட்ட ட்விட்டுகளும், விமர்சனங்களும் இன்னும் அழியாமல் அப்படியே இருக்க, விஜயின் இந்த சந்திப்பு அவரது மனப் பக்குவத்தையே காட்டுவதாக அமைந்திருக்கிறது.

அதே நேரத்தில், கபாலி நேரத்தில் விஜய் ரசிகர்கள் கொடுத்த பிரசாதத்தை பைரவா ரிலீஸ் நேரத்தில் அவருக்கு திருப்பித்தர காத்திருக்கும் ரஜினி ரசிகர்களை கூல் பண்ணதான் இந்த சந்திப்பு என்றும் காதை கடிக்கிறது கோடம்பாக்கம்.

‘பைரவா’ படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் அன்று, அதே செட்டில் இருந்த ரஜினியை 2.0 படப்பிடிப்பில் சந்தித்து பத்து நிமிஷங்களுக்கு மேலாக பேசிவிட்டு வந்திருக்கிறார் விஜய். பெரிய சூப்பர் ஸ்டாரும் சின்ன சூப்பர் ஸ்டாரும் சந்தித்துக் கொண்டதால், கோடம்பாக்கத்தில் திரிந்து கொண்டிருக்கும் போலி சூப்பர் ஸ்டார்கள் பலருக்கு எரிச்சலோ எரிச்சலாம்!

https://youtu.be/h262QQ_wtjY

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கீர்த்தி சுரேஷ் அனிருத்! ஆரம்பித்தது அடுத்த கலகம்!

‘பிஞ்சிலே பழுத்தது’ என்று சிலருக்கு மட்டும் முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ்சினிமா. அதிலும் ஐஎஸ்ஐ முத்திரை வாங்கிய பெருமை அனிருத்துக்கு உண்டு. ஆன்ட்ரியாவுக்கும் இவருக்குமான லவ், அர்த்த...

Close