நாடார் சமூகத்தை சேர்ந்த கஸ்தூரி ரஜினியை எதிர்ப்பதால்…? ஒரு பரபர அரசியல்!
தமிழக அரசியலில் ரஜினியின் அண்மைக்கால மூவ், பெரும் வலியை ஏற்படுத்தி பலரது நெஞ்சுப் பகுதியில் ‘மூவ் ’ தைலத்தை வைத்து தேய்த்தாலும் வலி குறையுமா என்கிற டவுட்டை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு டசன் முக்கியஸ்தர்களும், சுமார் ஓராயிரம் கருத்து கந்தசாதிகளும் ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கு கருப்புக் கொடி காட்டியும், கண்டபடி ஏசியும் தங்கள் வெறுப்பை காட்டி வருகிறார்கள். முக்கியமாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர் சுப.உதயகுமாரன் ரஜினிக்கு எழுதியிருக்கும் கடிதம், கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
தங்கர்பச்சான், வேல்முருகன், டைரக்டர் கௌதமன் போன்றவர்கள், தத்தமது கோபத்தை முகத்தில் தேக்கி முள்ளு லேகியம் சாப்பிட்ட எபெக்ட்டில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் நடிகை கஸ்தூரியின் கிண்டல், வலை தளங்களில் முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கிறது. “போர் போர்னு கேட்டு போர் அடிக்குது. அக்கப் போர்” என்று ட்விட்டரில் ரஜினியின் பேச்சு குறித்து விமர்சித்திருக்கிறார் அவர்.
“நல்ல அரசியல் தலைவருக்கு இக்கட்டான நேரத்தில் கூட சட்டென்று முடிவெடுக்கும் ஆற்றல் வேண்டும். வருவேனா… மாட்டேனா என்று சொல்லவே வருஷக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருப்பவர் ரஜினி” என்றும் ஓப்பன் கமென்ட் போட்டு, ரஜினியின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை அழ விட்டிருக்கிறார் கஸ்தூரி.
விரைவில் அரசியலுக்குள் என்ட்ரியாக வேண்டும் என்பதுதான் கஸ்தூரியின் விருப்பம் என்றும், அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அச்சமூக பிரமுகர்களின் ஆதரவுடன்தான் கருத்துக்களை ‘போல்டாக’ வைக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறது ஊர் உலகம்!
எடப்பாடி முதல்வர் ஆனதிலிருந்து… தீபா மாதவன் கட்சி ஆரம்பித்தது வரை, நாட்ல நாம நினைச்சுக் கூட பார்க்க முடியாத எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன.
நம்ம கஸ்தூரி போகிற காரிலும் சிவப்பு விளக்கு சுழலும் என்றால், அதை யாரால் தடுக்க முடியும்?
https://youtu.be/ffLoUsrxLEs
சார் இப்ப சிவப்பு விளக்கு சுழறது இல்லை. மோடி கட்டளைகள்
ஏழை மக்களின் குரல், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர், பாட்டாளிகளின் தோழன் போன்ற தலைப்புகளும் எங்கள் கலியுக கடவுள் ரஜினி அவர்களுக்கு தான் பொருந்தும்.