இனி கேரளா பக்கம் விஜய் சேதுபதி போனால்?

விஜய், விக்ரமை தொடர்ந்து கேரளாவில் விஜய் சேதுபதிக்கும் ஜாலி வேலி கட்ட ஆரம்பித்துவிட்டது ரசிகர் கூட்டம்! தலைவா… முத்தம்! தலைவா… போட்டோ! என்று விஜய் சேதுபதியை விரட்டி விரட்டி கெடுத்த கூட்டத்திற்கு அவரது சூப்பர் டீலக்ஸ் வேஷம் மட்டும் சொல்லொணா துயரத்தை கொடுத்துவிட்டது. ஏன்?

அப்படத்தில் அவர் திருநங்கையாக நடித்ததும், போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்சிடம் கற்பிழந்து கதறியதும் அப்படத்தின் ஜீவநாடியில் ஒரு துடிப்பு. கட்… இப்போ என்ன அதுக்கு?

அந்த திருநங்கை கேரக்டர் தங்கள் மீதிருக்கிற இமேஜை சுக்கு நூறாக்கிவிட்டதாக கோபப்படுகிறார்கள் கேரள திருநங்கைகள். இங்குள்ளவர்கள் போல சும்மாயிருக்க முடியாது அவர்களால். தினந்தோறும் தியேட்டர்களில் போராட்டம். அதிகாரிகளிடம் மனு என்று கதற கதற ஓட விடுகிறார்கள் விஜய் சேதுபதியின் இமேஜை.

இனி அவர் கேரளா பக்கம் போனால், வல்லிய பெண்குட்டி யாரேனும் கல்லை வீசி கவனிக்க முற்பட்டால், அதற்கு அவரது ஷில்பா அவதாரம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நானும் இயக்குனர் மகேந்திரனும் – பத்திரிகையாளர் சு.செந்தில் குமரன்

Close