எல்லாரையும் திடுக்கிட வைத்த யுவன்!

இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு மயங்கிக் கிடந்தது இளைஞர்கள் கூட்டம். அதெல்லாம் ஒரு காலம். திடீரென மாயமாய் போனது அத்தனையும். தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட திடுக்கிடல்களால் மெல்ல தன் இடத்தை பின் பக்கமாக நகர்த்திக் கொண்டே வந்தார் யுவன்.

யுவன் விட்ட கோடிட்ட இடத்தை நிரப்ப யார் யாரோ வந்தார்கள். அனிருத், சந்தோஷ் நாராயணன், போன்றவர்களுக்கு கொல்லை வழியாக குவிந்தது அதிர்ஷ்டம். நாடும் கோடம்பாக்கமும் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்பதை போல இருந்தார் யுவன். எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். நடுவில் இஸ்லாத்தை தழுவிய யுவன், அதே மதத்தில் ஒருவரை மணம் முடித்த பின்பு வாழ்வில் வசந்தம் வீசியது. ஒரு பெண் குழந்தை பிறந்தாள். மகள் பிறந்த நேரம்தான் யுவனையும் மீட்டெடுத்தது.

மளமளவென படங்களுக்கு இசையமைக்க துவங்கினார் அவர். இன்று யுவனின் கைகளில் பதினைந்து படங்கள் இருப்பதாக கூறுகிறது கோடம்பாக்கம். முன்பு இவரை விட்டுப்போன திரையுலக படைப்பாளிகள் மொத்த பேரும், திரும்பி யுவனிடமே வர ஆரம்பித்துவிட்டார்கள்.

பழைய ஸ்டைலில் பாட்டிசைக்க கிளம்பிவிட்ட யுவனால், இன்டஸ்ட்ரியில் நல்ல பாடல்களுக்கு உத்தரவாதம் என்பது ஒரு புறம் சந்தோஷம். தேங்கிய நீரில் முளைத்த சில திடீர் இசையமைப்பாளர்களுக்கு போகிற வாய்ப்பு இனிமேல் குறையுமே… அதுதான் எல்லாவற்றையும் விட பெரிய நிம்மதி.

 

1 Comment
  1. திரைப்பிரியன் says

    வாழ்த்துக்கள் யுவன்.

    வாருங்கள். நல்ல இசையில் பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற கூறுகெட்ட இசையால் காதுகளை கிழிக்கும் கொடூர இசையில் சிக்கி, வாடிக்கிடக்கும் தமிழ் திரைக்கு வசந்தம் தாருங்கள்.

    தற்போதைய இசையமைப்பாளர்களில் D.இமான் கொஞ்சம் பரவாயில்லை என்பது என் கருத்து.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு!

‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும்....

Close