ஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு!

‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற பெருந்தன்மை, இப்படி சிம்புவின் பட்டவர்த்தமான பேச்சுக்கு ஆஹா போடும் உலகம், சமயங்களில் ஜர்க் ஆவதுதான் கொடுமை.

இப்போது திருவாளர் பொதுஜனத்தை ஜர்க் ஆக விட்டிருக்கிறார் சிம்பு. எப்படி? சக கலைஞர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ்குமாரை போட்டுத் தாக்கிய வகையில்!

அச்சம் என்பது மடமையடா வெளியாகிற அதே நாளில்தான் வருவதாக இருந்தது ஜி.வி.பிரகாஷ் நடித்த கடவுள் இருக்கான் குமாரு. ஆனால் மோடியின் பொருளாதாரக் கொள்கை, குமாருக்கு சில சங்கடங்களை கொடுக்கும் என்பதை அறிந்ததால், ஒரு வாரம் தள்ளிப் போனது படம். தனி ஒருவனாக வந்த அச்சம் என்பது மடமையடா, செல்லாத நோட்டு பிரச்சனைக்கு நடுவிலும் செல்லுபடியானதுதான் பெரிய ஆச்சர்யம். படம் ஹிட். கலெக்ஷனும் சூப்பர் என்பதால், மறுபடியும் சிம்புவின் தெம்பில் நாலைந்து லிட்டர் ஒட்டகப் பால் கலந்தது.

சும்மாயில்லாமல் ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் பக்கத்தை நோண்டியிருப்பார் போல. அங்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றபடி போஸ் கொடுத்து வரும் ஜி.வி. ஒரு ட்விட் போட்டிருக்கிறார். அதில்தான் கடவுள் இருக்கான் குமாரு பிளாக் பஸ்டர் ஹிட் என்று குறிப்பிட்டுவிட்டார். இதில் பொங்கி பிரவாகம் ஆன சிம்பு, போட்டு தாக்கிவிட்டார் ஜி.வி.யை.

‘அட்டு ஃபிளாப் படங்களையும் கூடத் தான் பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள். அச்சம் என்பது மடமையடாவை எப்படி அழைப்பீர்கள்? முடிவை தெரிவிக்காமல் மகிழ்ச்சி என்று கூறுவது நல்லது’ இதுதான் சிம்புவின் ட்விட்.

புளிய மரக்கிளையை உலுக்கி பலாப்பழத்தை கொட்ட வைக்கிற வித்தை சிம்புவுக்கு மட்டுமே கை வந்த கலை! இதற்கு பதில் சொல்வதா, வேண்டாமா என்கிற குழப்பத்திலேயே இருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ். புலவருங்க சண்டை போட ஆரம்பித்தால், பூலோகம் என்னாவது? அமைதி அமைதி….

Read previous post:
Rajini Feared To Open up-Controversy.

https://youtu.be/inn-zZYnzZk

Close