ஃபத்வா என்றால் சாபம்! ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஃபத்வாதான்…

பிரபல இயக்குனர் மஜிதி மஜீத் இயக்கிய படம் ‘முகமத் -மெஸெஞ்சர் ஆஃப் காட்’

ஈரானிய மொழிப்படமான இதற்கு உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. உருவமற்ற இறை தூதராக வணங்கப்படும் நபிகள் நாயகம் இந்த படத்தில் உருவத்தோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறாராம். இதற்குதான் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, படத்தின் இயக்குனரான மஜிதிக்கும், இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சாபம் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பான செய்திகளில் ‘மஜிதி மஜீத்துக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இஸ்லாம் அமைப்புகள் ஃபத்வா’ என்று தலைப்பு வைக்கப்பட, வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் ஏதோ ஃபத்வா என்ற விருது வாங்கியிருக்கிறார் போல… என்று சந்தோஷமாக கடந்து போகிறார்கள் அதன் அர்த்தம் குறித்து அறியாதவர்கள். இது ஒருபுறமிருக்க, இந்த படத்தை இஸ்லாமியர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதால், கடும் நெருக்கடியில் இருக்கிறார் இசைப்புயல்.

இருவரும் இன்னும் விளக்கமளிக்கவில்லை. அப்படி அளித்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படுமா? தெரியவில்லை.

3 Comments
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    மைடியர் அந்து, பத்வான்னா மத ஆணை, சாபம்னு நீங்களா கிளப்பி விடாதேயுங்கோ!

  2. atham says

    உருவமற்ற இறை தூதராக வணங்கப்படும் நபிகள் நாயகம் !என எழுதியுள்ளீர்கள் இது மகா தப்பு முஸ்லிம்கள் முகமது நபியை வணங்குவதில்லை அல்லாஹ்வைத்தான் வணகுவார்கள் அல்லாஹ்வுக்குத்தான் உருவமில்லை ,நபி முகமத் அவர்களுக்கு உருவம் இருந்தது அவர் சாதரணமாக எல்லா மனிதர்களையும் போல் ஒருவர் ஆனால் இறைவனின் தூதர்

  3. பிம்பிடிக்கி பிளாப்பி says

    அலிபாய் என்கிற யுவன்ஷங்கருக்கு பர்தா போட்டுவிடுங்களேன்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதுவும் கபாலி ரஜினிதான்? கொளுத்துங்க கொளுத்துங்க…. நல்லா கொளுத்துங்க!

போட்டோஷாப் டிசைன் தெரிந்த அத்தனை விஷமிகளுக்கும் இது பரபர நேரம். ரஜினி பழைய புதிய ஸ்டில்களையெல்லாம் அள்ளியெடுத்து அதற்குள் வேறொரு வடிவத்தை நுழைத்து அற்புதமாக படைத்தால், அதுதான்...

Close