நஸ்ரியா அனுப்பிய MMS – ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஒண்ணு கூடிட்டாங்க!

கண்ணு மண்ணு தெரியாம காதல்ல விழுந்தா ஊரே கூடி உருமியடிக்கும் என்கிற விஷயத்தை இனிமேலாவது உணர்வாரா நஸ்ரியா? இப்படிதான் இந்த செய்தியை எழுதி முடிக்கணும். ஏன்னா, நஸ்ரியா விஷயத்தில் நடக்கிற சூட்சுமங்கள் அப்படி.

தமிழ்சினிமா ஹீரோக்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள். ஜெய்யை தவிர.

நஸ்ரியா விவகாரத்தில் முழு கண்ட்ரோல் இப்போது ஜெய்யிடம் இருப்பதாக கதைக்கிறார்கள் சில ஹீரோக்கள். நாம் காதை தீட்டிக் கொண்டு விசாரித்த வரையில், ஜெய் விலகல் பத்திரம் எழுதிக் கொடுக்காமல் நஸ்ரியா இனி தமிழ் படங்கள் எதிலும் கை நீட்டி அட்வான்ஸ் வாங்க முடியாது போலிருக்கிறது. ஏன்? நயன்தாராவை காதலிக்கும்போது சிம்பு எப்படி எல்லா விஷயத்திலேயும் தயாரிப்பாளர்களையும் டைரக்டர்களையும் இம்சித்தாரோ, அதைவிட பிரமாதமாக இம்சிக்கிறாராம் ஜெய்.

இது நய்யாண்டியில் நடந்த கதை. நஸ்ரியாவுக்கு ஒரு காஸ்ட்யூம் கொடுக்கப்பட்டதாம். அதை செல்போனில் படம் பிடித்த நஸ்ரியா, எம்.எம்.எஸ் மூலம் அதை ஜெய்க்கு அனுப்பி ‘இதை போட்டுக்கலாமா?’ என்றாராம். அவர் ‘வேண்டாம்’ என்று என்று பதிலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, திண்டாடிப் போனது நய்யாண்டிக் குழு. அது மட்டுமல்ல, படத்தில் தனுஷ் நஸ்ரியாவை கட்டிலில் வைத்து அணைக்கும் காட்சியை பற்றி கண்ணீரும் கம்பலையுமாக நஸ்ரியா ஜெய்யிடம் போனில் விளக்க, நேரடியாக ஸ்பாட்டுக்கே வந்தாராம் அவர். (ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனைன்னா விழுதை பிடித்து தொங்கிக் கொண்டாவது வந்துர மாட்டாங்களா?)

சற்குணத்திடம் ‘அந்த காட்சியை ரீ ஷூட் பண்ணுங்க’ என்று கிட்டதட்ட கட்டளை போட, அங்கேயே பிரச்சனை ஆரம்பம் என்கிறார்கள் இப்போது. நாலு சுவற்றுக்குள் நடந்தாலும் அதை நாட்டுக்கு அறிவித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார்கள் கோடம்பாக்கத்தில். இந்த தகவல்கள் மொத்தமும் எல்லா இளைய நடிகர்களின் காதுக்கும் போக, ‘அவ்ளோ டார்ச்சாரா அந்த பொண்ணு?’ என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள்.

கோடம்பாக்கம் என்கிற ஜிமெயில் அக்கவுன்ட்டில் நஸ்ரியா என்கிற இன்பாக்சையே டெலிட் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. எல்லாம் காதல் படுத்தும் பாடு.

Nazriya’s blind love makes young heroes of Kollywood worried

Nazriya’s episode though over with the release of Naiyaandi officially, the after-effects seems to have not died away yet! Yes, this is what we understand from the insiders of Kollywood circle. Though there have been lot of stories being aired about Nazriya’s blind love with Jai, is it necessary for Nazriya to take approval for all sundries from her hero? It is said that Nazriya had sent a costume she has to wear though a MMS to Jai, for Okaying it, but the hero seems to have rejected it. Nazriya promptly asked the director and costume designer to change the costume according to the specs Jai had told her. In another instances, Jai seems to have visited the shooting spot of Naiyaandi, after Nazriya described to him how the director shot some scenes involving her and Dhanush. Jai created a big scene, and the problem started to show its head, then and there. Now hearing all these stories the young heroes of Kollywood are in a fix, barring Jai. They are worried whether to pair with her or not as they are not in a position to pick and choose their heroines. Unless both Nazriya and Jai take some corrective measures, they would be pinpointed for all the problems in future, though they may not be at fault.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டைரக்டர் ஆகிறார் இசைஞானி இளையராஜா!

காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு கையில் நெருப்பு சட்டியையும் வைத்துக் கொண்டு திரிகிற வேலைதான் ஒரு படத்தை இயக்குகிற வேலையும். ‘பூண்டு, வெங்காயம், புளி, மொளகா எதை...

Close