வடசென்னை குழந்தைகளுக்காக நடைபெறும் ‘டாய்ஸ் ட்ரைவ்’..!
அரசு சாராத அமைப்பாக இருந்துகொண்டு சமூகத்தில் பொதுமக்களுக்கான தன்னாலான பங்களிப்பை செய்து வருகிறது ஜீவன் பவுண்டேஷன் அமைப்பு. பகிர்ந்தளிப்பதில் மிகப்பெரிய விஷயம் தங்களது மகிழ்ச்சியை அடுத்தவருக்கும் பகிர்ந்தளிப்பது தான். அதை மெய்ப்படுத்தும் விதமாக ஜீவன் பவுண்டேஷன் அமைப்பு நாளை வடசென்னை பால்வாடி குழந்தைகளுக்காக ‘டாய்ஸ் ட்ரைவ்’ என்கிற நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந்த நிகழ்வில் பிரபலமானவர்களின் குழந்தைகளையும் வடசென்னை பால்வாடி குழந்தைகளையும் ஒன்றாக சந்திக்க வைத்து, அவர்கள் தங்களிடம் உள்ள பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட . எழுதுபொருட்களை பால்வாடி குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். ‘தேவைப்படுகிறவர்களுக்கு கொடுக்கவேண்டும்’ என்கிற உன்னத நோக்கத்தை வலியுறுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது ஜீவன் பவுண்டேஷன்.