மானம் போவுதே… ‘மவுத் ’ நடுக்கத்தில் ஹீரோக்கள்! கோலிவுட்டை அலறவிட்ட ஸ்ரீ ரெட்டி!
கோடம்பாக்கத்தின் தற்போதைய பறவைக் காய்ச்சலே ஸ்ரீரெட்டிதான். கடந்த இரண்டு நாட்களாக தனது முகப்புத்தகத்தில் அவர் வெளியிடும் அதிரடிகளால் ஆடிப்போயிருக்கிறது ஏரியா. முன்னணி தெலுங்கு நடிகரான நானி தனக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்று ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டியின் வெடிகுண்டு வீச்சு, அங்கிருக்கும் வேறு பலரையும் பதம் பார்த்துவிட்டு தமிழ்சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது.
முதலில் ட்ரெய்லர்தான் விட்டார் ஸ்ரீரெட்டி. என்னை தமிழ் படவுலகமும் பயன்படுத்திக்(?) கொண்டது என்று அவர் சொன்னதை அவ்வளவு அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தெலுங்கில் படம் இயக்கிய இயக்குனர்களான எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் மீது பலருக்கும் டவுட் இருந்தது. அந்த சந்தேகத்தை கிளியர் பண்ணிக் கொண்டே வருகிறார் ரெட்டி.
முதலில் முருகதாஸ் பற்றி பேசியவர், “க்ரீன் பார்க்ல ரூம் போட்டோமே… ஞாபகம் இருக்கா?” என்றார். அதற்கே ஆடிப்போனது கோலிவுட். அதற்கப்புறம் யாருமே எதிர்பாராத திடீர் திருப்பம். ரயில் தண்டவாளத்தில் முயல் வந்து தலை வைத்தது போல பரிதாபம். ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் பற்றியும் புகார். ஸ்ரீரெட்டி அவர் குறித்து எழுதிய வார்த்தைகளை அச்சில் ஏற்றவே முடியாது. அவ்வளவு அசிங்கம்.
மூன்றாவது வந்து சிக்கினார் லாரன்ஸ். உங்க ரூமிற்குள் நான் நுழைந்த போது ராகவேந்திரா படம் இருந்தது. ருத்திராட்ச மாலை இருந்தது என்றெல்லாம் சொன்னவர் அதற்கப்புறம் எழுதிய விஷயங்கள் சென்சார் கட்!
எல்லாமே சில வருடங்களுக்கு முன் நடந்தவை. இவ்வளவு காலம் கழித்து அதை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதில் இருக்கும் உண்மைத்தன்மை என்ன? இதையெல்லாம் அலசி ஆராய்ந்து நீதி சொல்ல வேண்டிய இடத்திலிருக்கிறது அவரவர் மனசாட்சி.
ஆனால் ஒன்று. இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை போகிற போக்கில் எடுத்துவிடும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஒரு போலீஸ் புகாரோ, அவதூறு வழக்கோ, “எங்க… ஆதாரத்தை காட்டு பார்க்கலாம்” என்கிற வாய்சவடாலோ இந்த நிமிஷம் வரவில்லை என்று நினைக்கும் போதுதான், யக்கோவ்… இம்புட்டு பேரையும் எப்படி கவுத்தே? என்ன நோக்கத்துக்காக இப்ப இதையெல்லாம் செய்யுற? என்கிற கேள்விகள் எழுகிறது.
இ மெயில் காலத்துலயும் பிளாக் மெயில் நடக்குதுன்னா, டைட்டா ஆதாரம் இருக்கும்தானே அர்த்தம்?