அசிஸ்டென்ட் டைரக்டருக்கு அறை… மீனாட்சிக்கு அடி உதை! ஷுட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு
‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமகமானவர் மீனாட்சி! அதற்கப்புறம் அவர் நடித்த எந்த படமும் போஸ்டர் காசை கூட வசூலிக்க முடியாதளவுக்கு நெருக்கடிக்கு ஆளானதால், மெதுவாக மும்பைக்கே பேக் பண்ணியது தமிழ் ஃபீல்டு. அப்படி கிடைத்த ஓய்வில் மிக்சி கிரைண்டரெல்லாம் மலைக்கிற அளவுக்கு நொறுக்குத்தீனி தின்று உடுப்பி ஓட்டல் கிரைண்டர் போலவே பெருத்துப் போனார் அவர். “நீங்க இளைச்சு ஒல்லியா திரும்புனா இங்கியிருக்கிற ஹீரோயின் பஞ்சத்துக்கு இன்னும் நாலைஞ்சு வருஷத்துக்கு கல்லா கட்டலாம்” என்று யாரோ ஒரு குறு மனசு கோவிந்தன் அட்வைசிக்க, அன்று நிறுத்தியவர்தான் நொறுக்கை. இன்று பழைய மீனாட்சியாக இல்லாவிட்டாலும், பாழடைந்த சுவருக்கு கலரடித்த மாதிரி ஜோராகதான் இருக்கிறார்.
சுமார் நான்கு படங்களில் இப்போது ஹீரோயினாகவே நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் நேர்முகம். படப்பிடிப்புக்கு வந்த இடத்தில் தெரிஞ்ச வரைக்கும் நடிச்சமோ, முடிஞ்சு வரைக்கும் ருசிச்சோமா என்றில்லாமல் படப்பிடிப்பில் ஒரு உதவி இயக்குனரை அடித்து ஏகப்பட்ட பிரளயத்திற்கு வழி வகுத்துவிட்டார் மீனாட்சி. சம்பவம் நடந்த இடம் பிலிம்சிட்டி. முகூர்த்த(?) நேரம் சரியாக மாலை நான்கு மணி.
படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் தன் நண்பர்களுடன் சைகயில் ஏதோ பேச, அவர் தன்னைதான் கிண்டல் செய்கிறார் என்று நினைத்த மீனாட்சி அருகில் அழைத்து பளார் பளாரேன அறைந்துவிட்டாராம். இதில் மயங்கி விழுந்துவிட்டார் அவர். விடுவார்களா? மீனாட்சியை சூழ்ந்து கொண்டார்கள். ஒரே காக்ரே மூக்ரே என்று அர்ச்சனை. விட்டால் அடி விழும் என்பதை அறிந்து கொண்ட மீனாட்சி ஓடிப்போய் கேரவேனுக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டார். உள்ளே மீனாட்சி. வெளியே மதங்கொண்ட யானைகள். கேரவேனை உருட்டித்தள்ளுகிற கோபத்துடன் கதவை தட்ட… பதறிப் போனாராம் அவர்.
பிறகு கேரவேனுக்குள் நுழைந்த டைரக்டர் மற்றும் சில சமாதான தூதுவர்கள் மீனாட்சியை வெளியே வந்து உதவி இயக்குனரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். மன்னிப்பு கேட்பதற்காக வெளியே வந்தவரை இழுத்துப் போட்டு மொத்தவே ஆரம்பித்துவிட்டார்கள் சினிமா ஊழியர்கள். எப்படியோ தேகத்தில் பெரிய சிராய்ப்பில்லாமல் தப்பித்த மீனாட்சி, கேரவேனுக்குள்ளிருந்து ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி, அதை மீடியா முன் படித்துக் காட்டிவிட்டு தப்பித்தார்.
ஏன்யா… அதற்குள் மீடியா எப்படிய்யா அங்க? ஏன் சாமீய்… மீடியா பசின்னு ஒண்ணு இருக்குல்ல? அவ்வளவு லேஸ்ல விட்ருவமா?