தமிழ் பட ஹீரோ விபத்தில் மரணம்! மலேசியா சென்றபோது பரிதாபம்!!

க க க போ என்ற புதிய படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்விழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே இன்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவருகின்றனர். க க க போ படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நாயகன் மரணமான செய்தி கேட்டு இப்படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

படபிடிப்பு முடிவடைந்துவிட்டதால் சமீபத்தில் சன் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதன் ஒளிபரப்பை தன் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே மலேசியா சென்றார். அடுத்த வாரம் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருந்தது. அதற்குள் இந்த பரிதாபமான சம்பவம் நடந்துவிட்டது.


Read previous post:
பொறுப்புக்கு வந்துட்டா பருப்பு விலைக்கு கூட பதில் சொல்லி ஆகணும்! விஷால் அணியின் சங்கடமும் சமாளிப்சும்!

நடிகர் சங்கத் தேர்தல் நல்லபடியா முடிஞ்சுது. சங்கத்து கல்வெட்டை படிச்சோமா, சட்டு சட்டுன்னு பிரச்சனையை முடிச்சோமா என்று போக விடுகிறதா அரசியல்? நாடாளும் முதல்வரின் ஆசியில்லாமல், வீட்டிலிருந்து...

Close