கிளியெல்லாம் பறந்து போவுதே? புலம்பும் நடிகைகளின் மம்மிஸ்
அந்த காலத்து தேவிகாவில் ஆரம்பித்து, ஆறேழு வருஷத்துக்கு முன் தேவயானியால் கொந்தளித்து, தற்கால அமலாபால்களால் ஐயோவாகிக் கொண்டே இருக்கிறார்கள் நடிகைகளின் தாய் குலங்கள். அப்படியொரு அம்மாவின் லேட்டஸ்ட் ‘நெட்டி முறிவு’ சட்னா டைட்டஸ்! பிச்சைக்காரன் படத்தின் ஹீரோயினான இவருக்கும் அந்தப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான கார்த்திக்குக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
அவ்ளோதான். முடிஞ்சுது பிரச்சனை என்று இருந்தால், அதுதான் இல்லை. சட்னாவின் தாய்குலம் பொங்கி எழுந்துவிட்டார். “என் மகள் நடிச்ச பிச்சைக்காரன் பெரிய ஹிட். அவளை தேடி அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்திச்சு. ஆனால் எல்லாத்தையும் கெடுத்து என் பெண்ணோட எதிர்காலத்தையே பாழாக்கிட்டார் கார்த்தி. அந்த திருமணம் செல்லவே செல்லாது” என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மார்க்கெட்டில் டாப்பில் இருக்கும் போதே டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபால், தன் தாய்குலத்துக்கு கண்ணீரை வரவழைத்தார். ஐயோ… வர்ற வருமானம் போச்சே என்று அல்லும் பகலும் கவலையுற்ற தாய்குலம், நினைத்த மாதிரியே கல்யாணத்தை பெயிலாக்கி, காதல் ஜோடியையும் பிரித்துவிட்டார். இப்போது முன்பு போல படங்களில் பிசியாகிவிட்டார் அமலாபால். இந்த சாமர்த்தியம் எல்லாருக்கும் வராதல்லவா?
சட்னாவின் அம்மா, இந்த காதல் ஜோடியை பிரிக்க பல்வேறு வழிகளிலும் முயன்று வருகிறாராம். ஆனால் மகள் என்ன செய்தார் தெரியுமா? “இந்தா நீ போட்ட தோடு, மூக்குத்தி. இனிமே இந்தப்பக்கமே வரக்கூடாது” என்று எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். காதல் முதலில் கண்ணை மறைக்கும். அப்புறம் பெற்ற அப்பா அம்மாவை மறைக்கும்!
தன் கனவையெல்லாம் மகள்கள் மீது வைத்து வளர்க்கும் இதுபோன்ற தாய்குலங்களுக்கு, இந்த மகள்கள் தருகிற முடிவு பாவ மூட்டைக்கான டோக்கன்தான். தாய் சொல்லை தட்டாதீர் மகள்களே…
To listen audio click below:-