ஆஃப்டர் கபாலி! எங்கே போனார் இந்த சிம்பு?
நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ட்ரிப்பிள் ஏ படக்குழுவினர் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார். சுமார் 100 டிக்கெட்டுகளாவது அவர் சார்பில் எடுக்கப்பட்டதாக தகவல்.
இவர் ஒருபுறம் இப்படி ஆராதனையில் ஈடுபட்டிருக்க, இன்னொரு பக்கம் நடிகர் ஜெய்யும் தன் பங்குக்கு அவர் நடித்து வரும் பலூன் பட யூனிட்டுக்கு டிக்கெட்டுகளை தாரை வார்த்தார். சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சிகளில் கூட, சிம்பு படம் பார்க்க வருகிற களேபரத்தையெல்லாம் காட்டி இன்புற்றன.
இவ்வளவு களேபரமாக படம் பார்க்க கிளம்பிய இவ்விருவரும், படம் முடிந்து வெளியே வந்த நிமிஷத்திலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு முணுமுணுப்பு காட்டவில்லை. ஜெய்யாவது பாவம்… ட்விட்டர் என்றால் ஸ்பெல்லிங் என்ன என்று கேட்கிற ரகம். நம்ம சிம்பு அப்படியா? தும்மினால் இருமினால் ட்விட்டரில் துப்புகிற பழக்கம் உள்ளவராச்சே? அவர் தனது கருத்தை வெளியிடுவார் என்று கடந்த இரண்டு நாட்களாக காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
கபாலி உங்க பார்வையில் எப்படிதான் இருக்கு? சொல்லுங்க சிம்பு… சொல்லுங்க!