முத்தையாவை கொத்திய சூர்யா! அப்படின்னா பா.ரஞ்சித்?
ஒரு பிளாஷ்பேக்…. நடிப்புக்கே திலகம் வைத்த நடிகர் அவர். கேமிரா ஓடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு குழந்தையை தூக்கி முகத்திற்கு மேலே வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர். கேமிரா ரன்னிங் ரன்னிங்… சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் சந்தேகம். ‘ஒருவேளை அந்த புள்ளையை இவரே பெத்துருப்பாரோ?’ ஜனங்களின் யோசனைக்கு கட் சொல்லி முடிப்பதற்குள் டைரக்டர் கட் சொன்னார். அவ்வளவுதான்… கொஞ்சிக் கொண்டிருந்த பிள்ளையை அப்படியே புளோரில் இறக்கி விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு நடந்து போய் அவர் சேரில் உட்கார்ந்து கொண்டார். இதுதான் சினிமா.
பிளாஷ்பேக் ஓவர். நிஜக்கதைக்கு வருவோம்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக விஷால் கார்த்தி இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் அல்லவா? அந்த படத்தை இயக்கவிருப்பவர் கொம்பன் முத்தையா என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் ஒரு திடீர் திருப்பம். சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றுக்கு கொத்திச் செல்லப்பட்டுவிட்டார் அவர். விறுவிறுப்பாக கதை விவாதத்தில் இறங்கிவிட்டாராம் முத்தையா.
பா.ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் சூர்யா. தற்போது கொம்பன் முத்தையா படம் முந்திக் கொள்ளும் போல தெரிகிறது. அப்படியானால் ரஞ்சித்?
முதல் பாராவை உற்று உற்று படிக்கவும்!