அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும் விதத்தில் சங்கம் போட்ட கட்டுப்பாடு காரணமாக இந்த வழக்கம் ஒழிந்திருக்கிறது. ஒரு வேளை அது தொடர்ந்திருந்தால், அஜீத்தின் பிறந்த நாளான இன்று மட்டும் ஒவ்வொரு நாளிதழும் ஐந்து கிலோ எடையுள்ளதாக அமைந்திருக்கும்.

சரி… அவரைப்போலவே வெற்றியும் புகழும் அடையட்டும் என்று சரண் வாழ்த்தினாரே? அந்த ‘அவர் ’ யார்? சந்தேகமென்ன… புரட்சித்தலைவர் எம்ஜிஆர்தான். நிறத்திலும் சரி, குணத்திலும் புரட்சித் தலைவருக்கு நிகரானவராக இன்று திரையுலகத்தில் விளங்கும் ஒரே மனிதர் அஜீத் என்றால், அது கடைந்தெடுத்த ஜால்ராவும் அல்ல. கட்டுப்பாடுகள் மீறிய வார்த்தைகளும் அல்ல. தமிழ்சினிமாவோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர்களுக்கு அதன் உண்மை புரியும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பே கருணையுள்ளம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார். அதனால்தான் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய நாளிதழில் இப்படியொரு அழுத்தமான வார்த்தைகளுடன் மிக தைரியமாக விளம்பரம் கொடுக்க முடிந்தது சரணால். அப்போதே அப்படியென்றால், இப்போது எவ்வளவு பெரிய வள்ளல் என்ற நிலையை அவர் எட்டியிருப்பார்? அதற்கு ஏராளமான உதாரணங்கள் இங்கே இருந்தாலும், வெல்லம் இனிக்கும் என்பதை எத்தனை முறைதான் சொல்வது? அதனால் அஜீத் பற்றிய வேறு சில புதிய விஷயங்களுடன் அமைந்த கட்டுரை இது.

எதிராளியின் முகம் பார்த்தே அவர் எதற்காக நம்மை நாடி வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிற வழக்கம் புரட்சித்தலைவருக்கு உண்டு. அவர் கிளம்பும்போது, தேடி வந்தவரின் கையில் வேண்டியதை கொடுத்தனுப்புகிற ஸ்டைல் எம்ஜிஆருடையது.

அந்த பண்பு அஜீத்திடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாக கூறுகிறார்கள் அவரால் பயனடைந்தவர்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம் கதைகள் இருக்கின்றன அவரது உதவிய உள்ளம் பற்றி. அவரிடம் ஏதோ ஒரு வேலையாக பேசப் போயிருந்த நண்பர் ஒருவரின் அனுபவம் இது.

சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க போயிருந்தேன். அப்போதுதான் புதிதாக ஒரு செல்போன் வாங்கியிருந்தார் அவர். அவரது கண்களை பார்த்து நான் பேசிக் கொண்டேயிருந்தேன். ஆனால் அதையும் மீறி என் கண்கள் அவரது செல்போனை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தது. எவ்வளவு அழகாயிருக்கு? எங்கே வாங்கினீங்க சார்? என்றேன். அவரும் ஏதோவொரு நாட்டில் வாங்கியதாக கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார். அதற்கப்புறம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியிருப்போம்.

விடை பெறும் நேரம் வந்தது. ‘சார்… வர்றேன்’ என்று கூறிவிட்டு எழுந்தேன். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்றார். படக்கென்று அந்த செல்போனிலிருந்த சிம் கார்ட்டை கழற்றினார். பிறகு அந்த போனை அப்படியே என் கையில் வைத்து, ‘எடுத்துட்டு போங்க’ என்றார். நான் ஒரு கணம் ஆடிப் போனேன். ம்ஹூம் என்று நான் மறுத்த போதும் அவர் விடவில்லை. அதுதான் அஜீத். கொடுக்கணும்னு நினைச்சுட்டா ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டார் என்றார் அந்த நண்பர்.

செல்போன் கொடுக்கிற விஷயத்தில் மட்டுமல்ல, ஒரு டைரக்டருக்கு படம் கொடுக்கிற விஷயத்தில் கூட அவர் அப்படிதான். அவருக்கு கண், மூக்கு, வாய் எல்லாம் மனசு மட்டும்தான் அது சொல்வதை மட்டுமே கேட்பார் அஜீத்.

கதை சொல்ல வருகிற இயக்குனரை பார்த்ததும் இவருக்குள் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் வரணும். அவர் கதை சொல்லிவிட்டு கிளம்பிய சில தினங்களுக்குள் வேறெந்த கெட்ட விஷயங்களும் தனக்கு நடக்காமல் இருக்கணும். இவ்விரண்டும் சரியாக அமைந்தால் அந்த டைரக்டருக்கு படம் கொடுப்பது அஜீத்தின் வழக்கங்களில் ஒன்று என்கிறார் அஜீத்தை டீப்பாக அறிந்த திரையுலக பிரமுகர் ஒருவர்.

அதே மாதிரி சில விஷயங்களை நாம் நடத்துவதைவிட இயற்கை நடத்தும் என்று நம்புவாராம். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன விஷயம், அஜீத்தின் வேறொரு உலகத்தை நமது கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

கிரீடம் படத்தில் அஜீத் நடிக்க ஒப்பந்தமான சம்பவம் இது. பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் டைரக்டர் விஜய். கீரிடம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த படம். அந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று கூறியிருந்தார் கிரீடம் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வைத்திருந்த பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான அப்பச்சன். அதை இயக்குவதற்காக விஜய்யைதான் தேர்வு செய்திருந்தார் அப்பச்சன்.

கிரீடம் படத்தின் மலையாள பதிப்பை டி.விடியாக பதிவு செய்து அதை அஜீத்தின் கைகளில் கொடுத்துவிட்டு வந்திருந்தார் விஜய். ‘பாருங்க. பிடிச்சிருந்தா என்னை அழைங்க‘ என்று கூறிவிட்டு வந்திருந்தாராம் அவர். அந்த டி.வி.டியை வாங்கிய அஜீத், அதை வீட்டிலிருக்கும் ஒரு ரேக்கில் பத்திரமாக வைத்துவிட்டார். ஆனால் பார்க்க நேரமில்லை. விட்டுவிட்டார். நாட்கள் செல்ல செல்ல, அதை மறந்தும் விட்டார். அஜீத்திடமிருந்து அழைப்பு வரும் வரும் என்று காத்திருந்த விஜய், வரவில்லை என்றதும் இந்த வாய்ப்பு நமக்கில்லை என்று வேறு வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்.

ஒருநாள் தன் வீட்டிலிருக்கும் சவுண்ட் சிஸ்டத்தை மாற்றிவிட்டு பிரமைண்டமான ஒரு சிஸ்டத்தை வரவழைத்திருந்தார் அஜீத். அன்று ஒரு நாள் முழுக்க அதை டெக்னீஷியன்கள் துணையோடு வீட்டில் பொருத்தினார்கள். சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டுமே? ரேக்கில் இருந்து ஏதாவதொரு டி.வி.டி யை உருவி அதை போட்டு பார்க்கலாம் என்று எடுத்தால், வந்தது கிரீடம்.

அவ்வளவுதான். என்றைக்கோ ரேக்கில் வைத்த இந்த படம் இன்று நம் கைகளுக்கு வருகிறதென்றால்? இறைவன் ஏதோ சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டார். சவுண்ட் சிஸ்டத்தை செக் பண்ணியாகிவிட்டது. அதற்கு உதவியது கிரீடம் டி.வி.டி. படம் முடிந்ததும், உடனே விஜய்யைதான் அழைத்தாராம். இப்படி மனசு சொல்லிவிட்டால் போதும். வேறெந்த ஆராய்ச்சியும் கிடையாது அவருக்கு என்று பிரமிக்கிறார்கள் அவரை பற்றி நன்கு அறிந்து பழகியவர்கள்.

மனசுக்கு பிடித்திருந்தால் போதும். அவனுக்கு கார் இருக்கிறதா, பங்களா இருக்கிறதா, தோட்டமிருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்க மாட்டார். அவரை தன் நட்பு வட்டத்திற்கு கொண்டு வந்துவிடுவார். அந்த நட்பும் வெறும் அரட்டைக்காக மட்டும் என்று இருக்காது. அந்த நண்பனையும் தன்னோடு சேர்த்து கரையேற்றி அழகு பார்ப்பார். இப்போதும் அஜீத்தின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருக்கும் இளைஞன் ஒருவன் அவரை ‘அப்பா ’ என்றுதான் அழைக்கிறான். அவனது ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா? மிக மிக நடுத்தர குடும்பம்.

எதிரிகளை மன்னிக்கிற விஷயத்தில் அஜீத்திற்கு நிகர் அவரே! அதெப்படி? என்பவர்களுக்கு மட்டும் ஒரு சின்ன உதாரணத்தை, அதுவும் ஊருக்கே தெரிந்த உதாரணத்தை சொல்லிவிட்டு இந்த கட்டுரையை முடித்துக் கொள்வது சிறப்பு.

இப்போது அஜீத்தே விரும்பி அழைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறாரே, கவுதம் மேனன்? அவர் நாலைந்து வருடங்களுக்கு முன் ஒரு முன்னணி வார இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் அஜீத் பற்றி அவர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? ‘தோளுக்கு மேலே தலை நிற்காதவர்…’

‘மன்னிக்க தெரிந்தவனே மனிதன் ’ என்கிறது எல்லா மதங்களும். அஜீத், மதங்களெல்லாம் சேர்ந்து படிக்க வேண்டிய மனிதர்!

-ஆர்.எஸ்.அந்தணன்

9 Comments
  1. Rajkumar says

    One of the best article ever by RS Andhanan & also by a writer about ajith. Happy Birthday THALA”

  2. seelan says

    Happy Birthday THALA.
    Thankyou very much Editer.

  3. mahendrababu says

    தல தலதான்.திரைத் துறையில் சுயம்பாகத் தோன்றி , மக்கள் மனதில் கட்டிக் கரும்பென வலம் வருபவர்.கட்டுரை அருமை.

    1. dhanraj says

      VERY GOOD EXCELANT

  4. seenivasann says

    thanku very much mr.andhanan

  5. malli says

    oruthan periya alayitta aa oonnu katturai ezuthurathe periya vilambaramthan.I the ajith than jee padathu release appa oru naalu perukku sambala paaki vechathu.Ketta athukku kaaranam ajeeth illa antha pathathu producer ss chakravarthynu solveenga.eppadi ungalukku theriyumnu ketkureengula antha naalu perla nnanum oruthan.thanippatta murayila ajith romba smart than,aana mgr inaiyya solreenganna ,mgr in thiraimaraivu velaigal oorukke theriyum,ungalukku theriyalainaa neril vanthu solla naan thayaar

  6. vivek says

    S’s.சக்கரவர்த்தி அஜித்தை ஏமாற்றிய கதை ஊருக்கே தெரியும் ..
    ராம்ஜி ஏமாற்றிய கதையும் தெரியும் ..
    a.m ரத்னம் அட்வான்s கொடுத்து உடனே திருப்பி கேட்டு ,அதற்கு அஜித் காரை விற்று பனம் கொடுத்தது தெரியும் .
    அதே ரத்னம் கடனாளி யாக இருந்த போது யாரும் உதவாமல் அஜித் படம் கொடுத்து ஆதரித்தது தெரியும் .
    பாலாவுக்கு கூட எதிகாலத்தில் படம் கொடுப்பார் .
    எம்.ஜிம்.ஆர் ஒரு complete hero தான் ..
    அதே போல் அஜித் கூட real hero தான் ..

  7. jothi says

    iam proud of TALA fan

  8. Jayan says

    Real hero

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என் பொண்ணுக்கு எதிரா புரளி கிளப்புறாரு… சிம்பு மீது ஹன்சிகா அம்மா காட்டம்!

கோடம்பாக்கத்தின் இந்த வார ஹாட் ஷோ, ‘ஹன்சிகாவுக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த்துக்கும் லவ்வாமே?’ என்பதுதான். மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறியோடு அலைச்சல் காட்டும் எல்லா காதல்கள் போலதான்...

Close