அஜீத்திற்கு ஜிங் ஜக்! எடுபடுமா முருகதாசின் ஜால்ரா?

‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே போகிறது. ஏதாவது பெரிய சர்ச்சைகள் கிளம்பும்போது, ‘அது என் அக்கவுண்ட்டே இல்ல. அது போலி சார் போலி…’ என்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இந்த எமர்ஜென்ஸி இக்கக்கட்டான நிலையில்தான் ட்விட்டர் பேஸ்புக் ஏரியாவிலிருந்து மீண்டும் ஒரு கசமுசா!

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு ட்விட் செய்திருக்கிறார். ‘பாக்ஸ் ஆபிசின் 100 கோடி கிளப்பில் 12 நாளில் இணைந்திருக்கிறது கத்தி. துப்பாக்கி படத்திலேயே 100 குரோர் கிளப்பில் இடம் கிடைத்துவிட்டது விஜய்க்கு. அதற்கப்புறம்தான் கத்தி. இந்த சாதனையை வெல்ல வேண்டும் என்று நான் நினைப்பது அஜீத் சார் படத்தைதான். என்னை அறிந்தால் 11 நாளில் 100 கோடி வசூலை தொட என் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருக்கிறார் முருகதாஸ். இது குறித்துதான் ஏகத்திற்கு சர்ச்சை இப்போது.

அஜீத்திடம் எப்படியாவது கால்ஷீட் வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார் அவர். சாம பேத தான தண்டம் இவற்றுடன் ‘ஜிங் ஜக்’ என்றொரு யுக்தியும் சேர்ந்திருக்கிறது. எதற்கும் மசியாதவர்களை கூட, ‘ஜிங் ஜக்’ போட்டு மடக்கிவிடலாம் என்பது கோடம்பாக்கத்தின் சூத்திரம். அதைதான் முருகதாஸ் கடைபிடிக்கிறாரோ என்று ஆத்திரப்படுகிறார்கள் விஜய் ரசிகர்கள். ‘முருகதாஸ் படம்னா அது திருடப்பட்டிருந்தாலும், அல்லது திருடப்படாத ஃபிரஷ் கதையாக இருந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படிப்பட்ட படத்தில் அஜீத்தும்தான் நடிக்கட்டுமே’ என்று நினைக்கிறார்கள் வேறொரு பிரிவினர்.

இப்படி சும்மா கிடந்த ஊரை சங்கு ஊதி எழுப்பிவிட்டவர் முருகதாஸ்தானா? அல்லது நிஜகமாகவே அது ஃபேக் முகவரிக்காரர்களின் சூழ்ச்சியா? தெரிஞ்சா சொல்லுங்கப்பு…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது

மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “திகில்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். மற்றும்...

Close