தாதாவும் இல்லை, பஞ்ச் டயலாக்கும் இல்லை! வேதாளம் ஸ்பெஷல் -3
அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து அநேக வருஷமாச்சு. அவர் மீண்டும் அப்படியொரு ரோலில் நடிக்க வேண்டும்! இதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. வேதாளம் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், இதில் அஜீத்துக்கு இரட்டை வேடம் இல்லை. இரண்டு கெட்டப்! அவ்வளவுதான். கொல்கத்தாவில் டாக்ஸி டிரைவராக இருக்கும் அஜீத், செகன்ட் ஆஃபில் சென்னையிலிருப்பார். இது பிளாஷ்பேக்.
அதுமட்டுமல்ல, இந்த கேரக்டரில் அவரது ஜிப்பாவும், மொட்டைத்தலையும் அவரை பெரிய தாதா போல காண்பிக்கிறது அல்லவா? படத்தில் அவர் தாதாவும் இல்லை. கணேஷ் என்கிற சாதாரண அண்ணனாகதான் நடித்திருக்கிறார். “தெறிக்க விடலாமா?” என்று அவர் கேட்பதுதான் பஞ்ச் டயலாக் என்று நீங்கள் நினைத்தால், படத்தில் வரும் ஒரே பஞ்ச் டயலாக் அது மட்டும்தான். மற்றபடி மெனக்கெட்டு எந்த பஞ்ச் டயலாக்கும் அமைக்கவில்லையாம் சிவா.
ஒரு ப்யூரான அண்ணன் தங்கை கதை. வீரம் படத்தில் எப்படி விழுந்து விழுந்து சிரிக்க வைத்தாரோ, அதே போல இந்த படத்திலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.