அஜீத் படத்திற்கு செலவை இழுத்து வைத்த லட்சுமிமேனன்?
கரித்துண்டு ஸ்ருதிஹாசனுக்கு? கற்கண்டு லட்சுமிமேனனுக்கு என்பதாகதான் இருந்தது இதுவரைக்கும். ஆனால் நடந்ததே வேற என்கிறார்கள் அஜீத்தின் தல 56 யூனிட்டில். இத்தனை காலமும் இந்த படத்தின் ஷுட்டிங் தாமதம் ஆகி வருவதற்கு காரணம் ஸ்ருதியின் கால்ஷீட் முறையாக தரப்படாததுதான் காரணம் என்றுதானே வெளியே செய்திகள் கசிந்தன. ஆனால் லட்சுமிமேனனும் அதற்கு இணையான குடைச்சல்களை கொடுத்து வந்தாராம். எப்படியோ போராடி அவருடைய போர்ஷன்களை முடித்து பூசணிக்காயே உடைத்துவிட்டார்கள். அதற்கப்புறமும் ஒரு நாள் தேவைப்பட்டதாம். இதே தர்றேன்… அதோ தர்றேன் என்று இழுக்கடித்தவர், கடைசியாக ஒரு நாள் கொடுத்தார். அந்த நாள் கொழுத்த செகன்ட் சண்டே.
இதுபோன்ற செகன்ட் சண்டே சமயங்களில் பெப்ஸி தொழிலாளர்களுக்கு கட்டாய ரெஸ்ட். எந்த படப்பிடிப்பும் இருக்காது. இருக்கவும் கூடாது. ஆனால் வேறு வழியே இல்லாமல் படப்பிடிப்பு நடத்திதான் ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை வந்தால் மட்டும் கலந்து கொள்வார்களாம். அப்படியொரு சூழ்நிலையை கிரியேட் பண்ணிவிட்டது லட்சுமிமேனன் கொடுத்த நாள். அந்த நாளில் படப்பிடிப்பு நடக்க தொழிலாளர்களின் அனுக்ரஹம் இருந்தால் மட்டும் போதாது.
அவர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால் அப்படியே இரட்டிப்பு தொகையை தர வேண்டும். ஒன்றரை லட்சத்தில் முடிய வேண்டிய சம்பளத்தொகை லட்சுமியால் மூன்று லட்சம் ஆகியிருக்கிறது. இருந்தாலும் கால்ஷீட் ரொம்ப முக்கியம்ப்பா… என்று பல்லை கடித்துக் கொண்டு படப்பிடிப்பை முடித்தார்களாம்.
தங்கச்சி…. இப்படி பண்ணிட்டீயேம்மா?