மகனுக்காக நயன்தாராவை நாடிய தயாரிப்பாளர்
‘அப்பா… நயன்தாரா வேணும்ப்பா..’ என்று மகன் கேட்டால், ‘ஆகட்டும்டா மவனே ’ என்கிற அப்பாக்கள் டோலிவுட்டில் நிறையவே இருக்கிறார்கள். அப்படிதான் பெல்லம் கொண்டா சுரேஷ் என்கிற அப்பா, தன் மகனான பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாசுக்கு உறுதி கொடுத்திருக்கிறார். என்னங்கய்யா இது? வெல்லம் மண்டியில மூட்டை ஏத்துற மாதிரி டீல் பண்ணிக்கிறாங்க என்கிற சந்தேகம் ரசிக மஹா ஜனங்களுக்கு வந்திருக்கும். இல்லேன்னா வரணும்…!
வேறொன்னுமில்லை. ‘அல்லுடூ சீனு’ என்ற படத்தில் அறிமுகமாகிறார் இந்த ஸ்ரீநிவாஸ். எடுத்த எடுப்பிலேயே இந்த படத்தில் தன்னுடன் ஜோடியாக நடிக்க சமந்தா வேண்டும் என்றார். தெலுங்கில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சமந்தாவுக்கு ஒரு பெரிய பங்களாவையே இலவசமாக எழுதி வைத்து படத்தில் தன் மகனுடன் நடிக்க வைத்தாராம் அப்பா பெல்லம் கொண்டா சுரேஷ். அதற்கப்புறம் படத்தில் தமன்னா ஒரு சீன்ல செம்மையா வரணும்ப்பா என்று மகன் விருப்பப்பட, பெத்த(?) சம்பளம் கொடுத்து தமன்னாவையும் படத்தில் நடிக்க வைத்துவிட்டார் சுரேஷ்.
குழந்தையின் ஆசை அதோடு விட்டதா என்றால் அதுதான் இல்லை. இப்போது நயன்தாராவை கேளுப்பா என்கிறாராம். தெலுங்கில் பெரிய தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தும், பெரும் கோபக்காரர் என்கிற பில்டப்பும் உடைய பெல்லம்கொண்டா, நயன்தாரா என்கிற வெல்ல மண்டியின் வீட்டு கதவை தட்டி நிலவரத்தை சொல்ல…. ‘அட போங்க சார். புதுப்பசங்க கூட நான் நடிக்கறதில்ல. அதைவிட படத்தின் கதையும் எனக்கு புடிக்கல’ என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. இதனால் கடும் ஷாக் அடைந்திருக்கிறார் சுரேஷ்.
ஆ… ஊ… என்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் சுரேஷ் சைலண்ட்டாக திரும்பிவிட்டாராம். காரணம்? இவருகிட்ட இருக்கிறது ஒரே ஒரு துப்பாக்கிதான். ஆனால் நயன்தாரா தும்மினால் கூட செக்யூரிடிக்கு வந்து நிற்க ஆயிரம் பீரங்கிகள் அதே தெலுங்கு தேசத்தில் உண்டு.
மகனே… அப்பா உனக்கு வேற பொம்மை வாங்கி தர்றாராம். சரியா? சமத்து பிள்ளை…!