தமிழ்ல பேசக்கூடாதா? சங்கத்தை இழுத்து மூடு…! பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமாவின் முக்கிய அமைப்புகளில் ஒன்று கில்டு. தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் சொற்ப தொகையில் இதில் உறுப்பினர் ஆகிவிடலாம். (ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சேர வேண்டும் என்றால் லட்சங்களில் செலவாகும்) இந்த ஒரு காரணத்திற்காகவே கில்டு அமைப்பில் உறுப்பினர் ஆகி விடுகிறவர்கள் ஏராளம். இந்த கில்டு அமைப்புக்குதான் நேற்று பூட்டு போட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களான கலைக்கோட்டுதயம், ஜாகுவார் தங்கம், ஆதிராம் ஆகியோர். சமீபத்தில் இந்த சங்கத்திலிருந்து இவர்களை நீக்கியிருந்தார் கில்டு தலைவரான ஹேம்நாத் பாபுஜி. இதை தொடர்ந்துதான் இந்த அதிரடி.

இவர்களை ஏன் நீக்கினார் பாபுஜி? அதுதான் பகீரிலும் பகீர். அந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் தமிழர்கள். சங்கத்தின் சார்பாக வெளிவரும் செய்தி மடல் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் வந்து கொண்டிருக்கிறது. அது தமிழிலும் வர வேண்டும் என்றார்களாம் இவர்கள். அதுமட்டுமல்ல, சங்கத்தின் பொறுப்புகளிலும் இருக்கும் இவர்கள் சங்க கூட்டங்களில் தமிழில் பேசுவதாலும் இவர்களை நீக்கியதாக விளக்க கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் தலைவர் பாபுஜி.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் சங்கத்தில் தமிழில் பேசினால் தப்பா? என்று குமுறுகிறார்கள் ஜாக்குவார் தங்கம், கலைக்கோட்டுதயம், ஆதிராம் ஆகிய மூவரும். இதை தொடர்ந்து நேற்று கில்டு சங்கத்திற்கு சென்ற இவர்களை உள்ளே வர விடாமல் தடுத்தார்களாம் தற்போது பொறுப்பில் இருப்பவர்கள். தமிழில் பேசினால் தவறென்று நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகிகள் மீது கோபத்தில் இருந்த இம்மூவரும் அத்தனை பேரையும் வெளியேற்றிவிட்டு ஒரு பெரிய பூட்டை போட்டு பூட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.

பிரச்சனை கொழுந்துவிட்டு எரிகிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்திருக்கும் சோதனையை பார்த்தீர்களா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மகனுக்காக நயன்தாராவை நாடிய தயாரிப்பாளர்

‘அப்பா... நயன்தாரா வேணும்ப்பா..’ என்று மகன் கேட்டால், ‘ஆகட்டும்டா மவனே ’ என்கிற அப்பாக்கள் டோலிவுட்டில் நிறையவே இருக்கிறார்கள். அப்படிதான் பெல்லம் கொண்டா சுரேஷ் என்கிற அப்பா,...

Close