பிரபல பாடகியின் பேரனை புலம்பவிட்ட ஜிகிர்தண்டா!

‘ஜிகிர்தண்டா பெரிய ஹிட் தெரியுமோ?’ என்று ஊடகங்கள் உறுமி அடித்துக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் கரகரவென்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாராம். அதுவும் அவர் பழம்பெரும் பாடகியும் கானக்குயில் பேரரசியுமான பி.சுசீலாவின் பேரன் கிருஷ்ண குமார் என்பதுதான் ஐயோ சாமீய் தகவல். தனது பாட்டி காலத்திலிருந்த தரமும் குணமும் தற்பேதைய தமிழ்சினிமாவுக்கு இல்லை என்றாலும் லேட்டஸ்ட் தமிழ்சினிமா அவ்வளவு கொடூரமானது அல்ல என்று நம்புகிற பேரன் இவர். அதனால்தான் தஞ்சை, மற்றும் திருச்சி பகுதிகளில் தொடர்ந்து படங்களை வாங்கி திரையிட்டு வருகிறார்.

பல்வேறு படங்களை வாங்கி வெளியிட்டு வரும் விநியோகஸ்தரான இவரை சம்பந்தபப்பட்ட படங்கள் காப்பாற்றியே வந்திருக்கின்றன. ஆனால் ஜிகிர்தண்டாதான் அண்டாவை கவிழ்த்துவிட்டுவிட்டதாம். சுமார் முப்பது லட்சம் நஷ்டமாம். வெப்சைட்டுகளில் இந்த படத்தின் இயக்குனரை எல்லா தரப்பினரும் பாராட்ட பாராட்ட… பணம் போச்சே என்ற பதட்டத்திலிருக்கும் இவர் மட்டும், ‘எப்படிதான் இப்படியெல்லாம் வாசிக்கிறாங்களோ…?’ என்று வருந்துகிறாராம்.

இழந்த பணத்தில் பத்து சதவீதத்தையாவது திருப்பி கொடுங்கப்பா… என்று கதறும் இவரது புலம்பல், வெற்றி மிதப்பிலிருக்கும் இயக்குனருக்கு தெரியுமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தமிழ்ல பேசக்கூடாதா? சங்கத்தை இழுத்து மூடு…! பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமாவின் முக்கிய அமைப்புகளில் ஒன்று கில்டு. தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் சொற்ப தொகையில் இதில் உறுப்பினர் ஆகிவிடலாம். (ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சேர...

Close