அமலாபால் போன்… சமுத்திரக்கனி குழப்பம்!

சமுத்திரக்கனியின் ஆசையில் குறுக்கே வந்து விழுந்திருக்கிறது ஒரு கல்யாண இன்விடேஷன். இதையடுத்து ஜரூராக வேறொரு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார் அவர்.

தானே நடித்து தானே இயக்கும் ‘கிட்ணா’ என்ற படத்தில் அமலாபாலுக்கு டபுள் ரோல் என்றெல்லாம் சந்தோஷமாக பேட்டியளித்தார் சமுத்திரக்கனி. அதுவும் 45 வயது கேரக்டரில் அழுத்தமான நடிப்பை அவருக்கு வழங்க திட்டமிட்டிருந்த சமுத்திரக்கனிக்கு அமலா-விஜய் கல்யாண கிசுகிசு ஏகப்பட்ட கவலையை அள்ளித் தந்திருக்கிறது. அவர் எதிர்பார்த்த மாதிரியே அமலாவிடமிருந்து போன். ‘திருமணத்திற்கு பிறகு கண்டிப்பா நடிக்க மாட்டேன். இந்த கல்யாணம் திடீர்னு முடிவாயிருச்சு. அதனால் நீங்க வேற யாரையாவது நடிக்க வைச்சுக்கோங்க’ என்றாராம்.

அழகும் நடிப்பும் ஒருங்கே இணைந்த ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. அஞ்சலியிருந்தா அந்த கவலை இல்லாமலிருந்திருக்கும். அவரையும்தான் காணோமே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதயநிதியிடம் உதவி கேட்ட ஹன்சிகா மம்மி

ஹன்சிகா மறந்தும் சிம்புவை நினைத்துவிடக் கூடாது என்பதில் கன கச்சிதமாக கட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் மம்மி. இம்மியளவும் குறையாத அவரது இன்டர்போல் அறிவுக்கு நடுவே சிம்பு என்ன,...

Close