இந்த சலுகை ஒருத்தருக்கு மட்டும்… நட்புக்காக உருகிய சந்தானம்!

சிவகார்த்திகேயன் சந்தானம் இருவருக்குமிடையிலான ‘வார்’, தமிழ்சினிமாவின் டங்குவாரை அறுக்காமல் விடாது போலிருக்கிறது. நேத்து வந்த அவருக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்கா? அதுவும் கோடிக்கணக்கில் சம்பளமா? அப்ப நாந்தான் இவ்ளோ காலம் இளிச்சவாயனா இருந்துட்டேனா? என்று திடீரென ஆத்தாவின் அருள் வந்து ஆட ஆரம்பித்திருக்கிறார் சந்தானம். இற்தகாகவே ‘இனி ஹீரோவாகதான் நடிப்பேன்’ என்று கூறி வருகிறார். தன்னை தேடி யார் வந்தாலும், சந்தானத்தை ஹீரோவா நடிக்க வைக்கறதுன்னா வாங்க, இல்லேன்னா லெப்ட் திரும்பி ரைட்ல நுழைஞ்சிங்கன்னா வாசல் இருக்கு. அப்படியே கிளம்பி போயிருங்க என்கிறாராம். ‘செல்லம்’, ‘ராஜா’ என்று பழைய பாசத்தோடு கொஞ்சிக் கொண்டே வருகிறவர்களுக்கும் இதே பதில்தான் வருகிறது.

சந்தானம் கால்ஷீட் எப்போ தர்றாரோ, ஷுட்டிங்கை அப்போ வச்சுக்கலாம் என்று பாசம் காட்டிய உதயநிதிக்கே கால்ஷீட் இல்லை என்று சொல்லுமளவுக்கு தனது கதாநாயக கொள்கையில் தீவிரமாக இருக்கிறார் சந்தானம்.

இவ்வளவு டென்ஷனிலும் ஒரே ஒருவருக்கு மட்டும், ‘நான் காமெடி ரோல் பண்றேன். அதுவும் உங்களுக்காக’ என்று அவர் கூறியிருப்பதையடுத்து அருட் பிரசாத கொடை வள்ளலாக அவரை நினைக்க ஆரம்பித்திருக்கிறது பாஸ் என்கிற பாஸ்கரன் கோஷ்டி. இந்த படத்தின் செகன்ட் பார்ட் எடுக்க படு தீவிரம் காட்டி வருகிறார் அப்படத்தின் டைரக்டர் ராஜேஷ். எஸ்.எம்.எஸ்., ஓ.கே ஓகே என்று சந்தானத்தை லிஃட்டில் ஏற்றி வேடிக்கை பார்த்த பெரிய மனுஷனாச்சே? இந்த ஒரு கர்ட்டசிக்காகவே பா.எ.பா படத்தில் காமெடி ரோலில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் சந்தானம்.

படத்தில் ஆர்யாவுடன் தமன்னா இருக்கிறார். எப்படியாவது நயன்தாராவையும் உள்ளே நுழைத்துவிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ். சந்தானம் மாதிரி, இவருக்காக அவர் ஒப்புக் கொண்டால் ஆச்சர்யமில்லை என்கிறது இந்த நிமிடத்து தகவல்.

Read previous post:
அமலாபால் போன்… சமுத்திரக்கனி குழப்பம்!

சமுத்திரக்கனியின் ஆசையில் குறுக்கே வந்து விழுந்திருக்கிறது ஒரு கல்யாண இன்விடேஷன். இதையடுத்து ஜரூராக வேறொரு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார் அவர். தானே நடித்து தானே இயக்கும் ‘கிட்ணா’...

Close