அனுஷ்கா வாழ்த்துக்களுடன் அமர்க்களப்பட்ட விஜய் அமலாபால் நிச்சயதார்த்தம்!
அவரே எழுதிய திரைக்கதையை விட சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த காதல் கதை. ‘இருவருக்கும் லவ்வாம்…’ என்று கிசுகிசுவில் ஆரம்பித்த காதல், கோலாகலமான நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. அனுஷ்கா, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்த விஜய் அமலாபால் அதிகாரபூர்வமான தம்பதிகள் ஆனார்கள்.
நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். ஒரு ஏஞ்சலை போல வெள்ளை நிற கவுனில் வந்திருந்தார் அமலா. வெளிர் நீல நிற கோட் அணிந்திருந்தார் விஜய். இந்த செட்டியார் சேச்சி நிச்சய விழாவில் சிக்கன் பிரியாணியும் கமகம விருந்தாக பரிமாறப்பட்டதாம்.
விழாவுக்கு அனுஷ்கா வந்திருந்ததுதான் ஆச்சர்யம். அதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றில் அனுஷ்காவுக்கு செம அடியாம். அதுவும் இடுப்பில்! வீக்கமும் பலம் என்றார்கள். யாரோ வில்லன் நடிகர், லேசாக உதைப்பதற்கு பதில் கனமாக மிதித்துவிட்டாராம். கோழி மிதிச்சு சோழி புரண்ட கதையாக, நடந்த சம்பவத்தை விசாரிக்கிறேன் பேர்வழி என்று முன்னணி ஹீரோக்கள் நாள்தோறும் அனுஷ்கா வீட்டுக்கு வருகிறார்களாம். வந்தவர்களும் சும்மா விசாரிக்காமல் ‘எங்க காட்டுங்க?’ என்று ‘சம்பவ இடத்தை’ நோட்டமிட்டுவிட்டு போகிறார்களாம். ரெண்டு வாரம் கட்டாய ஓய்விலிருக்கும்படி மருத்துவர் அட்வைசிக்க, மேற்படி கண்காட்சி திடலுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாராம் அனுஷ்கா.
இப்போது முற்றிலும் குணமாகி விட்டதை தொடர்ந்துதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் அவர்.
அடுத்தது அனுஷ்கா கல்யாணம்தான்!