தனுஷ் ரசிகர்கள் உதைப்பாங்கன்னு பயந்துட்டேன்! வில்லன் அமிதாஷ் அச்சம்

‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தில் தனுஷை முறைத்துக் கொண்டே திரியும் இந்த டீன் ஏஜ் வாலிபர்தான் அமிதாஷ். ஹீரோவுக்கு இணையான ரோலில் வந்தாலும் ப்யூர் வில்லன்! பில்டிங் கான்ட்ராக்ட் மோதல்தான் பிற்பாதி கதையை நகர்த்திக் கொண்டு செல்லும். அந்த பிற்பாதியில் நீக்கமற நிறைந்திருக்கும் அமிதாஷுக்கு இந்த படத்தில் நடிக்கும் யோகம் வந்தது எப்படி? அதுவும் முதல் படமே ஹிட் என்றால் எப்படியிருக்கும். வானத்திற்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ‘ஹீரோவா நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். வில்லனாகிட்டேன். இனி சினிமா விட்ட வழிதான். வில்லனா இருந்தாலும் ஓ.கே. ஹீரோவா இருந்தால் டபுள் ஓ.கே’ என்றவரிடம்,

வேலையில்லா பட்டதாரியில் நடிக்க வந்தது பற்றி பேசினோம். நானும் அனிருத்தும் எல்.கே.ஜி படிக்கிற காலத்திலிருந்தே ஃபிரண்ட்ஸ். ஒண்ணாவே படிச்சோம். அவங்க வீட்டு விழாக்கள் எதுவா இருந்தாலும் நானும் இருப்பேன். அப்படி ஒரு முறை போயிருந்த போதுதான் தனுஷ் அண்ணாவை பார்த்தேன். பார்க்க நல்லாயிருக்கியே? வில்லனா நடிக்கிறீயான்னு கேட்டார். உடனே சரின்னு சொன்னேன். அதை ஞாபகம் வச்சுருந்து இந்த கேரக்டர் கொடுத்தார். தியேட்டர் விசிட் போயிருந்தேன். தனுஷ் ரசிகர்கள் நல்லா உதைக்கப் போறாங்க என்கிற பயத்தோடுதான் போனேன். ஆனால் போன இடத்தில் செம ரெஸ்பான்ஸ். எல்லாரும் கை குலுக்கி பாராட்டியபோது நான் நானாகவாகவே இல்ல… அப்படியே பறக்கிற மாதிரியிருந்திச்சு என்றார்.

படத்துலேயே ரொம்ப கஷ்டமான காட்சி எது? கேட்டால், அட… இப்படியெல்லாமா லந்து பண்ணுவீங்க என்பது மாதிரி ஒரு பதிலை சொன்னார். பைட் சீன்ல கூட எனக்கு கஷ்டமா இல்லேங்க. ஆனால் படத்துல ஒரு குட்டி மொபெட் வரும் பாருங்க. அதுல நானும் தனுஷ் அண்ணாவும் டிராவல் பண்ணியதுதான் செம கஷ்டம். அந்த மொஃபாவை இந்த படத்திற்காகவே ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து செஞ்சாங்க. அந்த சின்ன கேரியர்ல நான் உட்கார்ந்து போகதான் ரொம்ப சிரமப்பட்டேன் என்றார்.

அமலாபாலே அதுலதான் போச்சு. உங்களுக்கு என்னவாம் பிரதர்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மக்கள் தளபதி… மற்றொரு ஹீரோவுக்கும் பட்டம்?

எந்த ஸ்டாராக இருந்தாலும் அவருக்கு ஒரு பட்டத்தை கொடுக்கிற வழக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது. இதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரசிகர்களுக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் பல நட்சத்திரங்கள்....

Close