மக்கள் தளபதி… மற்றொரு ஹீரோவுக்கும் பட்டம்?
எந்த ஸ்டாராக இருந்தாலும் அவருக்கு ஒரு பட்டத்தை கொடுக்கிற வழக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது. இதை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரசிகர்களுக்காக ஏற்றுக் கொள்கிறார்கள் பல நட்சத்திரங்கள். புரட்சி தளபதி என்ற பட்டத்தை விஷால் ஏற்றுக் கொண்டதும் அப்படிதான். சின்ன தளபதி என்ற பட்டத்தை பரத் ஏற்றுக் கொண்டதும் அப்படிதான்.
இப்பவும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் என்றே குறிப்பிடுகிறார்கள் அவரது ரசிகர்கள். மேடைகளில் பேசும் விஐபிகள் கூட இந்த அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை குறிப்பிட்டுதான் அஜீத் என்றே பேச ஆரம்பிக்கிறார்கள். சிலர் அவரை தல என்று குறிப்பிடும்போதே கைதட்டல் விண்ணை பிளக்கிறது. இளைய தளபதி, இசைய தளபதி, என்று பட்டங்களால் குளிர்ந்து போய் கிடக்கிறார்கள் ஹீரோக்கள்.
அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் தொழிலதிபரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. தற்போது அவர் நடித்து வரும் என் வழி தனி வழி படத்தின் டைட்டில் கார்டில் இவருக்கு மக்கள் தளபதி என்ற பட்டம் தரப்பட்டிருக்கிறது. தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படியொரு பட்ட பெயருடன் வரப்போகிறாராம் ஆர்.கே.
கைநிறைய பொருளாதாரம் இருப்பவர்கள் இப்படியெல்லாம் பில்டப் கொடுக்க ஆரம்பித்தால், வேறு ஏதோ திட்டம் இருக்கு என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. போகிற திசை அறிவாலயம் பக்கமா? லாயிட்ஸ் ரோடு பக்கமா? என்பதை முன் கூட்டியே சொல்லிவிட்டால், முதல் நியூசாக போடலாமே ஆர்கே?!