எங்க வீட்டு ஆம்பள நாய்! ஏகப்பட்ட எரிச்சலில் எமிஜாக்சன்

ஏண்டா போக்கத்த பொன்னுசாமிகளா… ஒரு பொண்ணோட பேக்ரவுண்ட், கலாச்சாரம் தெரியாமலே அவரைப்பற்றி அப்படி சொல்லலாமா? என்று கடுப்பாகிக் கிடக்கிறார்கள் எமி ஜாக்சனின் இங்கிலாந்து பற்றாளர்கள். என்னவாம்? யாரோ ஒரு இளம் வாலிபருடன் எமி டேட்டிங் போகிறார் என்று எழுதிய மும்பை பத்திரிகையாளர்கள், ஆதாரத்திற்கு ஒரு போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பேசிக்கலா அவர் ஒரு வெளிநாட்டுக்காரர். அங்கெல்லாம் டேட்டிங், ஊட்டிங் சர்வ சாதாரணம். இதை ஏதோ உசிலம்பட்டி பொண்ணு ஊர் ஊராக திரிகிற அளவுக்கு எபெக்ட் கொடுத்து எழுதினால், ஐயோ பாவம்… எமிதான் என்ன செய்வார்?

இருந்தாலும் அவர் ஒரு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். “எனக்கு ரெண்டே ஆம்பளைங்கதான் பழக்கம். ஒண்ணு… எங்க அப்பா. இன்னொன்னு எங்க வீட்டு ஆம்பளை நாய்” என்று கூறிவிட்டார். பொண்ணு கடும் கோபத்துல இருக்குங்கறது நாய் விஷயத்துல புரிஞ்சுருக்குமே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Archana Ravi Stills Gallery

Close