ரஜினி தந்ததை விட பல மடங்கு! அள்ளி வழங்கிய தெலுங்கு ஹீரோக்கள்!

இப்படியொரு ஒப்பீடு தேவையா? என்றெல்லாம் வள்ளென்று விழுந்து வயிறு வரை எரியும் ரஜினி ரசிகர்கள் இந்த தலைப்பை படித்துவிட்டு அப்படியே ஷட்டவுன் பண்ணிவிட்டாலும் கவலையில்லை. பட்… அண்டை மாநில நடிகர்களுக்கு இருக்கும் அன்பு கூட நம்ம ஊர் ஹீரோக்களுக்கு இல்லையே என்கிற வருத்தம் இல்லாமலிருக்குமா என்ன?

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரெண்டே நடிகர்கள்தான். ஒருவர் அமிதாப்பச்சன். இன்னொருவர் எங்க சூப்பர் ஸ்டார் என்று கேட்பவர்களிடம் , “வாங்கட்டும்… நல்லா வாங்கட்டும். ஆனால் இந்த பத்து லட்சம்தானா உங்க பவுசு?” என்று கேட்காமலிருக்குமா தமிழ்நாடு. (ஐயா, நீங்க நதிநீர் இணைப்புக்காக தருவதாக சொன்ன அந்த ஒரு கோடியை இப்ப கொடுத்துருங்க, போதும்!)

ரஜினி தமிழ்நாடு வெள்ள நிவாரண தொகையாக பத்து லட்சத்தை தருவதாக அறிவித்த அடுத்த மணித்துளிகளில் நடந்த அதிசயம் இது. ஆந்திரா நடிகர் அல்லு அர்ஜூன் தமிழக வெள்ள நிவாரணத்திற்காக 25 லட்சத்தை வழங்கியிருக்கிறார். மகேஷ்பாபு பத்து லட்சத்தையும்இ ஜுனியர் என்டிஆர் பத்து லட்சத்தையும், ரவிதேஜா ஐந்து லட்சத்தையும், கல்யாண் ராம் ஐந்து லட்சத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.

தலைவணங்குகிறோம் நிஜ ஸ்டார்களே…

Read previous post:
எல்லாத்துக்கும் காரணம் அந்த ஐம்பது பைசா மிட்டாய்தான்!

ஒரு வெற்றிப்படத்தின் பிள்ளையார் சுழி எந்த நிமிடத்தில் விழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. சமயத்தில் அந்த பிள்ளையாராலேயே கூட! அப்படிதான் இருக்கிறது உறுமீன் படம் உருவான...

Close