அனிருத் முருகதாஸ்… தொடர்கிறதா ஹிட் காம்பினேஷன்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ரயில் விட்டாங்க. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவா இருந்திருக்கணும். அதனால் ரயில்வே துறையின் பட்ஜெட்ல பெட்ஷீட் விழுந்திருக்கணும். இல்லேன்னா திட்டம் ரத்தாகுமா? கிட்டதட்ட அப்படியொரு ரயில் சேவையை ஆரம்பித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இங்கிருக்கும் டெக்னீஷியன்களை வடக்கு பக்கம் கொண்டு செல்வதுதான் அவரது திட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஷரத்து. (ஐயய்யோ… சரத்குமாரையெல்லாம் அழைச்சுட்டு போகலைங்க. ஷரத்து ஷரத்து!)

முதல் கட்டமாக தமிழில் ஹிட்டடித்த மௌன குரு படத்தின் கதையைதான் இந்தியில் தனக்கேற்ற மாதிரி லேசான மாற்றங்களுடன் எடுக்கப் போகிறார். இதில் அருள் நிதி நடித்த கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கப் போகிறார். இந்த செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். கதையை தொடர்ந்து நெக்ஸ்ட் பார்சல்?

அனிருத்! கத்திக்காக அவர் போட்ட பாடல்கள் ஏ.ஆர்.முருகதாசை கவர்ந்துவிட்டதாம். அதனால் அவரை இந்திக்கு அழைத்துப் போகிறார். அனிருத் பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கப் போவது ரஜினியையும் பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். மடியில் உருண்டு விளையாடிய பிள்ளை, பாலிவுட் போகுதுன்னா இருக்காதா பின்னே?

1 Comment
  1. பிசாசு குட்டி says

    அங்கனேயே இருக்கட்டும்.. திரும்பவும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டாம்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Inauguration Of South African Film Festival Stills

Close